Friday, April 11, 2014

நம் பெற்றோரை வயதான காலத்தில் நன்றாக பார்ப்பது நம் கடமை

நபிகளிடம் ஒருவர் கேட்டார், “என் அன்னை என்னை இருபது வயது வரை கண்ணும் கருத்துமாக வளர்த்தாள்.
அவளுடைய முதுமைக்காலத்தில் நானும் அதேபோல கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டேன்.
இரண்டுக்கும் சரியாகி விட்டதல்லவா?
...
” நபிகள் தந்த பதில் அழகானது. அவர் சொன்னார்,
“ஒருபோதும் அது இணையாகாது.அன்னை உன்னை வளர்க்கிறபோது, நீ வளர்ந்து வாலிபனாகி வாழ வேண்டும் என்ற கண்ணோட்டத்திலேயே வளர்க்கிறாள்.
ஆனால் நீயோ அவளை கடைசிவரை நன்றாகப் பார்த்துக் கொள்ளும் எண்ணத்தில் பார்த்துக் கொள்கிறாய்.
அவள் காத்திருந்தது உன் வாழ்வுக்காக.
நீ காத்திருந்தது அவள் சாவுக்காக. இரண்டும் எப்படி நிகராகும்?” என்றாராம் நபிகள்.
# நம் பெற்றோரை வயதான காலத்தில் நன்றாக பார்ப்பது நம் கடமை

No comments:

Post a Comment