Sunday, April 6, 2014

பக்திக்கும், பயத்திற்கும் என்ன சம்பந்தம்?

பயம் நீங்கத்தான் பக்தியோடு சுவாமியையே கும்பிடுகிறோம். அப்படியிருக்க பக்திக்கும், பயத்திற்கும் என்ன சம்பந்தம்? பயத்தைப் போக்கி, அபயம் அளிப்பதால் தான் கடவுளின் வலக்கரத்தை "அபயஹஸ்தம்' என்பர். 

லலிதா சகஸ்ரநாமம் அம்பிகையை "நிர்பயா' (பயமற்றவள்) என்று குறிப்பிடுகிறது. நல்லது எது, கெட்டது எது என்ற பகுத்தறிவு இருந்தும், தெரிந்தே மனிதர்கள் தவறு செய்வதால் தான், பக்தியோடு பயமும் சேர்ந்து விட்டது. பக்தியில் பக்குவம் ஏற்பட்டு, சரியான நெறியில் சென்றால் பயம் காணாமல் போய்விடும்

No comments:

Post a Comment