Sunday, April 6, 2014

மகாளய பட்சம்

மகாளய பட்சம் என்று கூறப்படும் புண்ணிய நாட்களில் பித்ருக்கள் வஸீ, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபமாக நம் இல்லம் தேடி வந்து நம்மை ஆசீர்வதிக்கிறார்கள். அவர்களுக்கு நாம் தில தர்ப்பணம் மூலமாக ப்ரீதி செய்தால் விசேஷமாகும். மகாளய பட்சத்தில் அனைத்து நாட்களிலும் நாம் மகாளய தர்ப்பணம் விதிமுறையாக செய்தல் அவசியம். 

முக்கியமாக பித்ருக்களின் திதியை. மகா பரணி, மத்யாஷ்டமி, வ்யபாத தினங்களில் சிலர் செய்கிறார்கள். மகாளய பட்சத்தில் தந்தை வழி, தாய்வழி பித்ருக்களுக்கு மட்டுமல்லாமல், காருணிக (சந்ததி இல்லாத) பித்ருக்களுக்கும் நாம் மகாளய தர்ப்பணம் செய்யவேண்டும். 

பித்ருக்களான நமது உற்றார், உறவினர்கள், மனைவி சகோதரிகள், குரு, ஆச்சார்யர்கள், பந்துமித்ராதிகள், அனைவருமே காருணிக பித்ருக்கள் ஆவார்கள். நமது பரம்பரையில், நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ, எத்தனை சந்ததிகள் இறந்துபோயிருந்தாலும், அவர்களுக்காக செய்யும் சிராத்தம் மகாளய சிராத்தமாகும். 

இதை தகப்பனார் இல்லாதவர்கள் மட்டுமே செய்யக்கூடும். ஆண் வாரிசு இல்லாத மனைவி, கணவனுக்கு மகாளய சிராத்தம் செய்வதானால் மகாளய அமாவாசை அன்று செய்வது விசேஷமாகும். தகப்பனார், தாயாரின் வார்ஷிக சிராத்தம் மகாளய பட்சத்தில் வந்தால் அந்த சிராத்தத்தை செய்த பிறகு மட்டுமே மகாளய சிராத்தம் செய்தல் வேண்டும். 

அதற்கு முன்பு செய்யக்கூடாது. மகாளய பட்சத்தில் ஒரு நாளாவது மகாளய சிராத்தம் செய்ய வேண்டும். இதை செய்வதினால் நாம், நமது வம்சத்தில் எல்லோரும் சகல சவுபாக்யங்களுடன் வாழ நமது பித்ருக்கள் அனுக்ரகம் செய்வர் என வேதம் கூறுகிறது

No comments:

Post a Comment