Sunday, April 6, 2014

ஆடி மாதம் திருமணம் செய்யலாமா?

கன்னிப் பெண்கள் ஆடி மாதம் விரதம் இருந்து அம்மனை வணங்க திருமண பிராப்தம் கூடிவரும் என்பது நம்பிக்கை. சிறப்பு மிக்க ஆடி மாதத்தில் நல்ல விஷயங்கள் தொடங்கக் கூடாது என்று எந்த சாஸ்திரத்திலும் இல்லை. இவையெல்லாம் அவரவர் வசதிக்கேற்ப பரப்பப்பட்ட வதந்திகளாகும். 

பொதுவாக இந்த மாதத்தில் கிராமங்களில் விரதங்கள், வழிபாடுகள், சாமி கும்பிடு விழாக்கள், பெரிய உற்சவங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். ஆன்மிகத்திலும் இறைவழிபாட்டிலும் ஈடுபட வேண்டி இருப்பதால் அதற்கு இடையூறாக மற்ற சுபவிசேஷங்கள் இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஆடி மாதத்தில் சுப விசேஷங்களை தவிர்த்து, அதற்கு அடுத்த மாதமான ஆவணியில் தொடங்கினார்கள். 

ஆகையால் நம் முன்னோர்களின் செயல்களுக்கு ஏதாவது காரணம் இல்லாமல் இருக்காது. சில விஷயங்கள் எல்லாம் காலப்போக்கில் மறைந்துவிட்டதாலும் மறைக்கப்பட்டதாலும், மருவி விட்டதாலும் உண்மையான தத்துவங்களை நாம் தெரிந்தகொள்ள முடியாமல் போய்விட்டது. 

ஆகையால் இந்த மாதத்தை இறை வழிபாட்டிற்கு உகந்த மாதமாக காலம் காலமாக பின்பற்றி வருகின்றனர். ஆகையால் மாதங்களில் எந்த குறையும், குற்றமும் இல்லை. ‘வடிவாய் நின்வல மார்பினில் வாழும் மங்கையும் பல்லாண்டு’ என்று ஆழ்வார்களால் பாடப்பட்ட பூமாதேவியின் அம்சமாக ஸ்ரீ ஆண்டாள் அவதரித்தது ஆடிப்பூரத்தில்தான் என்பது ஆடி மாதத்தின் மகிமையை உணர்த்தும் வரிகளாகும். ஆடி மாதத்தில் இறை பக்தி செலுத்தி எல்லாம் வண்ட ஆண்டவன் அருள் பெறுவோமாக.

No comments:

Post a Comment