Friday, April 4, 2014

எந்த திசையில் அமர்ந்து பூஜை செய்யலாம்?

நீங்கள் பூஜையோ, மந்திரம், ஸ்லோகங்கள் சொல்லியோ, பாடல்கள் பாடியோ கடவுளை வணங்க வேண்டுமானால், கிழக்கு அல்லது வடக்கு ஏற்றது. பெரும்பாலும், பூஜையறை கிழக்கு நோக்கியே இருக்கும். ஆனால், நீங்கள் அமரும் போது அதன் நேர் எதிரே (மேற்கு) நோக்கி அமராமல், வடக்கு நோக்கி அமர வேண்டும். தெற்கு திசையும் கூடாது.
வீடுகளில் சிலை வழிபாடு செய்பவராக இருந்தால், ஒரு தாம்பாளத்தில், சிலைகளை வைக்க வேண்டும். சிலைகள் கிழக்கு நோக்கி இருக்குமாறு செய்து, வடக்கு நோக்கி நீங்கள் அமர்ந்து கொண்டு, அபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேக நீர் தாம்பாளத்தில் இருந்து வழியும் வசதி இருந்தால் வடக்கு நோக்கி வழியும் வகையில் செய்ய வேண்டும். எல்லா தெய்வ பூஜைக்கும் இது தான் முறை என்றாலும், சிவபூஜை செய்பவர்கள் இதைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டுமென, நிர்ணய ஸிந்து என்ற நூலில் உள்ள ஸ்லோகம் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment