Wednesday, April 16, 2014

தினம் வீட்டில் பூஜை முடிக்கும்போது கீழ்க்கண்ட மந்ரம் சொல்லி முடிப்பது மிகவும் சிறந்தது.

தினம் வீட்டில் பூஜை முடிக்கும்போது கீழ்க்கண்ட மந்ரம் சொல்லி முடிப்பது மிகவும் சிறந்தது
1.ஸ்வஸ்தி ப்ரஜாப்ய பரிபாலயந்தாம் ந்யாயேன மார்கேன மஹீம் மஹீசா:
கோப்ராஹ்மண...ேப்ய சுபமஸ்து நித்யம் லோகா சமஸ்தோ சுகினோ பவந்து
சுருக்கமான பொருள்: ஆட்சி செய்வோர் மக்களை நல்ல முறையில் ஆளட்டும்; பசுக்கள் பிராமணர்கள் உள்பட உலகிலுள்ள எல்லோரும் சுகமாக இருக்கட்டும்
2.காலே வர்ஷது பர்ஜன்ய: ப்ருதுவி சஸ்ய சாலினீ
தேசோயம் க்ஷோப ரஹிதோ ப்ராஹ்மண சந்து நிர்பயா:
பொருள்: காலத்தில் மழை பெய்யட்டும், வயல்கள் நெற்பயிர்களுடன் குலுங்கட்டும், நாடு முழுதும் வளம் பெருகட்டும், பிராமணர்கள் பயமின்றி வாழட்டும்.
3.அபுத்ரா: புத்ரிண சந்து புத்ரிண சந்து பௌத்ரிண:
அதனா: சதனா: சந்து ஜீவந்து சரதாம் சதம்
பொருள்: குழந்தைகள் இல்லாதோருக்கு குழந்தைகள் பிறக்கட்டும், பிள்ளைகள் எடுத்தோர் பேரப் பிள்ளைகள் பெறட்டும், செல்வமில்லாதோருக்கு செல்வம் கொழிக்கட்டும், நூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க.

No comments:

Post a Comment