Thursday, April 3, 2014

'ஆலயம் ஏன்?

'ஆலயம் ஏன்?' என்ற நூலில் இருந்து)
சுவாமி, கருவறைக்குள் தான் இறைவன் அமர்ந்திருக்கின்றார். நாம் வழிபாடு செய்கிறோம். ஆனால் அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்று மண்டபங்கள், பெரிய பெரிய பிரகாரங்கள் இவை அத்தனையும் தேவை தானா ? இடத்தை அடைத்துக் கொண்டு இவ்வளவும் இருக்க வேண்டுமா?
தனித்தனியாக வீட்டில் வணங்க முடியாத ஏழை மக்களும் உண்டு, இடவசதி இல்லாததால். இவ்வளவு பெரிய இடம் அமைந்து இருப்பதே பொதுவுடைமையை போதிப்பதற்குத் தான். முடிமன்னர்கள் இப்பட...ி விசாலமான ஆலயங்கள் அமைத்தது குடிமக்களின் நன்மை கருதித் தான். அது மட்டுமல்ல. ஆலயங்கள் மிகச் சிறந்த சமுதாய நிலயங்கள் ஆகவும் விளங்கி இருக்கின்றன.
பொது மக்களின் முறையீட்டை விசாரித்துத் தீர்ப்பை அளிக்கும் நீதிமன்றங்களாகவும் இருந்து இருக்கின்றன. சுந்தரருக்கும் சிவபெருமானுக்கும் நேர்ந்த வழக்கு திருவெண்ணை நல்லூர்க் கோயிலிலும், பழையனூர் நீலிக்கும் வணிகனுக்கும் நேர்ந்த வழக்கு திருவாலங்காட்டுக் கோயிலிலும், விசாரிக்கப் பட்டு இருக்கின்றன.
இன்றும் திருவோத்தூர், திருமாற்பேறு, திருப்பனந்தாள், கூகூர், திருவெறும்பியூர் முதலிய தலங்களில் உள்ள கல்வெட்டுகள் ஆலயங்கள் நீதி மன்றங்களாக இருந்ததைத் தெரிவிக்கின்றன. அது மட்டுமல்ல. திருக்கோயில்கள் மருத்துவ மனைகளாகவும் சமயத்தில் இருந்து இருக்கின்றன. திருமுக்கூடல் கல்வெட்டின் மூலம் இதை அறியலாம்.
இன்னும் இயற்கை உற்பாதங்களான புயல், மழை, வெள்ளம் பெருகிய போது அந்த பாதிப்பில் இருந்து தப்ப, மக்களுக்குத் திருக்கோயில்கள் தான் அடைக்கலம் தந்திருக்கின்றன. போர்கள் நிகழும் பொழுது பொது மக்களுக்குப் புகலிடமாகவும் திருக்கோயில்கள் திகழ்ந்து இருக்கின்றன.
இப்படிப் பலப்பல நற்காரியங்கள் நடைபெறத் தான் திருக்கோயில்களை விரிவாகக் கட்டி இருக்கின்றார்கள்.

No comments:

Post a Comment