Saturday, April 5, 2014

அரை நிமிடம் தியானம் செய்தால் கூட போதும்

சாஸ்திரங்களைக் கரைத்துக் குடித்து விட்டோம் என்பதற்காக, ஒருவருக்கு கடவுளின் தரிசனம் கிடைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்கிறது கடோபநிஷதம்.
கடவுளை அடைவதற்கான வழிமுறையாகவே பூஜை, ஆச்சார, அனுஷ்டானம் போன்றவை ஏற்படுத்தப்பட்டன. காலையில் எழுந்ததும் அரை நிமிடம் தியானம் செய்தால் கூட போதும். இந்த தியானத்தை யோகாசனத்தில் அமர்ந்தோ, நின்று கொண்டோ செய்ய வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. படுத்த நிலையிலேயே செய்யலாம். ஆனால், மனம் மட்டும் விழிப்புநிலையில் இருக்க வேண்டும். ""இறைவா! என்னைக் காத்தருள்வாய். நீ குடியிருக்கும் இடமான என் உள்ளத்தை எப்போதும் தூயநிலையில் இருக்க அருள்புரிவாயாக'' என்று வேண்டினாலே போதும். பிற மந்திரங்களோ, வழிபாடுகளோ தேவையில்லை.
கடவுளை, உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் தியானியுங்கள். தாய், தந்தை, எஜமானன், குழந்தை, நண்பன் என விரும்பிய நிலையில் அவரோடு உறவாடி மகிழுங்கள். தாயாகக் கருதி வழிபடுவது எளிதானது. அம்மாவிடம் அன்பு செலுத்துவது எல்லாக் குழந்தைகளுக்கும் இயல்பு. நாமும் அன்னையாகிய கடவுளிடம், சிறுகுழந்தையைப் போல அன்றாடம் வேண்டிக் கொள்வோம்.

No comments:

Post a Comment