Thursday, April 17, 2014

குணதோஷம்

குணதோஷம்
மனிதனிடம் உள்ள குறை பெரிதாக பேசப்படுவதற்கு அவனிடமுள்ள குணதோஷம் தான் காரணம்! அடிக்கடிக் குணம் மாறிப்பேசுவதும், கர்வம் பெருமை தற்புகழ்ச் சித்தனத்தோடு பேசி மகிழ்வதும், திடீரென்று ஒருவரை வெறுப்பதும் விரும்புவதும் குணதோஷமாகும்!
கடவுள் பிரார்த்தனையில் ஈடுபட்டு முடிந்ததும் கூட பக்தனுக்கு “ஆகா! அரிய சாதனை செய்தோம்!” என்ற கர்வம் வந்து விடுகிறது, இதனால் பக்திசாதனை செய்த போதும் குணத்தோஷம் விலகுவதற்காக இறைவனை ஆழ்ந்த பக்தியோடு அதிகமாக அடிக்கடிப் பிரார்த்திக்க வேண்டும்.
...
உண்மையான பக்தி-ஞானம் நிறைந்த பக்தி, சுயநலமில்லாத லாபம் கருதாத பக்தி தந்தருள்க தாயே! என்று அடிக்கடிப் பிரார்த்தனை செய்ய வேண்டும்!

No comments:

Post a Comment