Friday, April 4, 2014

மெய்கர்பம் , பொய்கர்பம்

பெண்கள் கருவுறுதலில் இரண்டு வகையிருப்பதாக சித்தர் பெருமக்கள் கூறுகின்றனர். அவை மெய்கர்பம் மற்றும் பொய்கர்பம் ஆகும். மெய்கர்ப்பம் பற்றி விளக்க தேவையில்லை என்பதால், பொய்கர்பம் என்னவென பார்ப்போம்.
சில பெண்களுகு மாதாமாதம் வெளியேற வேண்டிய சூதமானது அதிகமான வாய்வு மற்றும் பல்வேறு காரணிகளால் வெளியேறாமல் கருவரையின் உட்புற சுவர்களில் படிந்து இறுகி கட்டி போலாகிவிடுமாம். இவ்வாறு தொடர்ந்து சூதனம் வெளியேறாது போனால் அவை மேலும் படிந்து பெரியதாகி விடுமாம்.இந்த கட்டியானது கருவறைக்குள் அசைந்து ...இடம் மாறுமாம். சில காலம் கழித்து பிரசவ வேதனை போல வலியேற்பட்டு வெளியேறிடுமாம். இதனை ஆரம்பத்தில் கண்டறிந்து உரிய மருந்துகளை உட் கொண்டால், இந்த கட்டிகள் சிதைந்து வெளியேறும் என்கின்றனர். அவ்வாறு கவனிக்கத் தவறினால் நாளடைவில் பல கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என்கின்றனர்.
இந்த இரண்டு கர்பங்களுக்கு இடையேயான வித்தியாசஙக்ளை கண்டறியும் முறைகளை சித்தர்கள் பின் வருமாறு வரையறுத்துக் கூறுகின்றனர்.
மெய்யான கர்ப்பம் தரித்த பெண்ணின் வயிற்றில் இரண்டு மண்டல காலம்(மூன்று மாதம்) எவ்வித அசைவோ, சலனமோ இருக்காதாம்.
பொய் கர்ப்பம் உள்ள பெண்களுக்கு ஆரம்பம் முதலே அசைவுகளும், சலனங்களும் இருக்குமாம்.
மெய்யான கர்ப்பத்தில் பெண்ணின் வயிறு படிப்படியா பெரிதாகுமாம்.
பொய்யான கர்ப்பம் உள்ள பெண்களுக்கு 25 முதல் 40 நாள்களுக்குள் வயிறு பெரியதாகி விடுமாம்.
மெய்யான கர்ப்பம் தரித்த பெண்ணின் வயிற்றில் விரலை வைத்து அழுத்தி எடுத்தால் ஏற்படும் பள்ளம் மெது மெதுவாக மறையுமாம்.
பொய்யான கர்ப்பம் உள்ள பெண்ணின் வயிற்றில் விரலால் அழுத்தி எடுத்தால் ஏற்படும் பள்ளமானது சடுதியில் மறையுமாம்.
மெய்யான கர்ப்பமானது பதினொரு மாதங்களுக்கு மேல் நீடிக்காதாம்.
பொய்யான கர்ப்பம் பல வருடங்கள் கூட நீடிக்குமாம்.
மருத்துவ அறிவியல் வளர்ந்து விட்ட இன்றைய சூழலில் இவையெல்லாம் பெரிதான தகவல்கள் இல்லைதான், ஆனால் எவ்வித அறிவியல் முன்னேற்றமோ, வசதியோ இல்லாத ஒரு காலகட்டத்தில் நமது மூதாதை ஒருவர் இதையெல்லாம் தன் நூல்களில் விரிவாக பாடி வைத்து விட்டு சென்றிருப்பது அன்றைக்கே மருத்துவ துறையில் நாம் எந்த அளவிற்கு உச்சத்தில் இருந்திருக்கிறோம் என்ப்தை பறை சாற்றுகிறதல்லவா...
இம்மாதிரி இன்னமும் எத்தனையோ பல அரிய தகவல்கள் ஆவணப் படுத்தப் படாமல் அழிந்து கொண்டிருக்கின்றன. அவற்றை நம்மால் இயன்ற வரையில் தேடியெடுத்து பாதுகாத்து,மேம்படுத்தி இனி வரும் தலைமுறைகளுக்கு கொடுத்திட வேண்டும்.

No comments:

Post a Comment