Saturday, April 5, 2014

மூன்று விதமான தாய்

தசரதருக்கு கோசலை, கைகேயி, சுமித்ரா என்று மூன்று பட்டத்தரசிகள். இந்த மூவருமே மூன்று குணம் கொண்டவர்கள். கைகேயி தன் மகன் பரதனுக்கு பட்டம் சூட்ட விரும்பினாள். அதற்கு தடையாக இருந்த ராமனைக் காட்டுக்கு அனுப்பவும் கணவரிடம் வரம் பெற்றாள். தான் வாழ பிறரைக் கெடுப்பது அரக்க குணம்.
 ராமனுக்கு பட்டாபிஷேகத்திற்கு நாள் குறித்ததைக் கேள்விப்பட்டதும் மகிழ்ந்த கோசலை, அவன் காட்டுக்குச் செல்ல இருப்பதை அறிந்ததும் மனம் துடித்தாள். இன்பத்தைக் கண்டால் மகிழ்வதும், துன்பத்தைக் கண்டால் துவள்வதும் மனித குணம்.
சுமித்ரை தன் மகன் லட்சுமணனிடம்,""ராமனிடம் தம்பி என்ற உரிமை எடுத்துக் கொள்ளாதே! ஒரு வேலைக்காரன் போல் நடந்து கொள்,'' என்று சொல்லி அனுப்பி வைத்தாள். பிறர் நலனுக்காக, துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளும் இவளே "தெய்வத்தாயாக' உயர்ந்து நிற்கிறாள்.

No comments:

Post a Comment