Sunday, April 6, 2014

மனிதனால் இமாசலத்தின் மீது பறக்க முடிகிறது. ஆனால் அவனால் அங்கு ஈஸ்வரனைப் பார்க்க முடியவில்லையே?...

ஈஸ்வரன் இமாசலத்தின்மீது அமர்ந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இன்று மனிதனால் அதே இமாசலத்தின் மீது பறக்க முடிகிறது. ஆனால் அவனால் அங்கு ஈஸ்வரனைப் பார்க்க முடியவில்லையே?...
ஒருவன் தன் காதலியிடம், ‘‘எப்போதும் என் இதயத்தில் குடியிருக்கிறாய்” என்கிறான். அவள் உடனே அவனது இதயத்தைப் பிளந்து பார்த்தால் என்ன ஆகும்?
ஈஸ்வரன் இமாசலத்தின் மீது அமர்ந்திருப்பதாகக் கூறுவது ஓர் உருவகமே. தூய்மையான எண்ணங்கள், தூய்மையான செயல்கள் இவற்றிற்கு வெண்ணிறத்தை அடையாளமாகக் குறிப்பிடுவதுண்டு. அதேபோல் மலைமீது உருவாகும் பனி எந்தவித அசுத்தமும் படியாதது. அத்தகைய வெண்ணிறப் பனிமலை இறைவனின் உறைவிடம் என்பது ஓர் உருவகம் மட்டுமே.
‘இமா’ என்பது தூய்மையான வெண்ணிறத்தைக் குறிக்கிறது. ‘அசலம்’ என்பது அசையாத பொருள். சபலங்களால் மனம் அசைவது மானுடம். அந்த அசைவு ஏதும் இன்றி இருப்பது தெய்வீகம். அதை ‘நிச்சல’ என்றும் கூறுவர். ஆக இமாசலம் என்ற சொல் தூய்மைக்கும் அமைதிக்கும் அசைவற்ற உறுதிக்கும் அடையாளமான சொல். அந்தப் பண்புகள் அமையும்போது இறைவன் அங்கு குடியிருக்கிறான். நம்முடைய இதயத்தில் இந்தப் பண்புகள் அமைந்துவிட்டால் ஈஸ்வரன் அங்கு வந்து தங்குவான். நாமும் அவன் இருப்பதை உணர முடியும்.

No comments:

Post a Comment