Friday, July 11, 2014

கர்மவினை.

கர்மவினை.
புத்தரிடன் ஒருவன். "கெளதமரே..! நீண்டநாளாகவே எனக்கொரு சந்தேகம். நீங்கள் தான் தெளிவு படுத்த வேண்டும்..'?' என்று கேட்டான். ""கேள்..! சொல்கிறேன்..!'' என்றார் புத்தர்.
"மனிதர்கள் பலவிதமாக வாழ்கிறார்களே..! சிலர் முகத்தைப் பார்த்தால் அழகு ததும்புகிறது.. சிலரோ பார்க்கச் சகிக்காதவர்களாய் இருக்கிறார்கள்.. சிலரோ அறிவாளி..! இன்னும் சிலரோ முட்டாளாய் திரிகிறார்கள்..! சிலரோ செல்வச் சீமான்கள்.. சிலர்.. சிலர் அன்றாடப்பாட்டுக்கும் அவதிப்படுகின்றனர். ஏன் இந்த ஏற்றத்தாழ்வு என்பதை கொஞ்சம் விளக்குங்கள்..?'' என்று கேட்டான்.
"அது தான் அவரவர் என்பது..! பிறப்பு.., இறப்பு.., வாழ்க்கை முறை எல்லாவற்றையுமே நம்முடைய கர்மவினை தான் தீர்மானிக்கிறது..! இதனால் தான் இந்த ஏற்றத்தாழ்வு. இதிலிருந்து விடுபடவேண்டுமானால் நல்லவனாய் இருந்து தர்மத்தை பின்பற்றுவது ஒன்று தான் வழி..'' என்றார் புத்த பெருமான்.
(புத்தர் கடவுளை பற்றியோ.. ஆன்மாவை பற்றியோ எதுவும் கூறவில்லை. ஆனால் மறுபிறவியையும் கர்மவினையையும் ஏற்றுக் கொண்டார்.)

No comments:

Post a Comment