Saturday, July 12, 2014

கடமைக்கு கடவுளும் அடிமை!

ஊருக்குள் புதிதாக சாமியார் ஒருவர் வந்திருந்தார். யாரும் அவரிடம் மரியாதையாக நடந்து கொள்வதாக இல்லை. சாமியாருக்கு கோபம் வந்து விட்டது. ஊரிலுள்ள பெருமாள் கோயிலை நோக்கி நடந்தார். ""பெருமாளே! இந்த ஊரில் மழையே இல்லாமல் போகட்டும். இப்போதே உன் சங்கை எடுத்து உள்ளே வை!'' என்று சாபமிட்டார்.
விஷ்ணு தன்னுடைய சங்கெடுத்து ஊதுவதால் தான் பூமியில் மழை பெய்வதாகச் சொல்வதுண்டு.
ஊதும் வேலை இனி இல்லை என்பதால், பெருமாளும் அதை உள்ளே எடுத்து வைத்தார்.
மழை இல்லாததால், மக்கள் அந்தப் பருவத்து சாகுபடியை கைவிட முடிவெடுத்தனர். ஆனால், உரிய நாள் வந்ததும், ஒரு பெரியவர் மட்டும் கலப்பையுடன் வயலுக்கு கிளம்பி விட்டார். செல்லும் வழியில் கோயில் வந்ததும், ""பெருமாளே! எப்போதும் போல உன்னருள் எனக்கு வேணும்!'' என்று சொல்லி வணங்கினார்.
பெருமாளோ,""என்னைய்யா! உமக்கு சாமியார்
சாபமிட்டது தெரியாதா?'' என்றார்.
"" பெருமாளே! எனக்கு எல்லாம் தாங்களே!
சாமியாரின் கோரிக்கையை அவரது தவஉணர்வுக்காக ஏற்றீர்கள். இப்போது மழை பெய்ய வேண்டும் என நான் வேண்டுகிறேன். என் கடமையுணர்வுக்காக தாங்கள் ஏற்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்!'' என்றார்.
பெருமாள் மகிழ்ந்தார். சங்கை எடுத்து மீண்டும்
ஒலியெழுப்பினார். மழை பொழிந்தது. பெரியவரின் கடமை உணர்வைக் கண்ட ஊர் வியந்தது.
கடமை உணர்வின் முன் கடவுளும் அடிமையாகி விடுகிறான்.

No comments:

Post a Comment