Wednesday, July 9, 2014

எல்லாக் கடவுளும் ஒன்று தானே. உள்ளூரில் இருக்கும் கோயிலை விட்டு வெளியூர் சென்று வணங்குவது தேவைதானா?

எல்லாக் கடவுளும் ஒன்று தானே. உள்ளூரில் இருக்கும் கோயிலை விட்டு வெளியூர் சென்று வணங்குவது தேவைதானா?
புராண அடிப்படையில் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு வரலாற்றுச் சிறப்புண்டு. அந்த வகையில் குறிப்பிட்ட கோயில்களில் குறிப்பிட்ட தெய்வங்கள் சிறப்பு அம்சம் கொண்டதாக விசேஷ சக்தி பெற்றவையாக எழுந்தருளியிருக்கின்றனர். எல்லா சிவன் கோயில்களிலும் அம்மன் சந்நிதி உள்ளது. எனினும் மீனாட்சியம்மன் உலகம் போற்றும் உன்னத தாயாக மதுரையில் வீற்றிருக்கிறாள். காரணம், மதுரையின் புகழ் கூறும் புராணங்களில் மீனாட்சி தனித்தன்மை பெற்றவளாகவும், பாண்டிய ராணியாக அரசாட்சி செய்ததுமேயாகும். எல்லா கோயில்களிலும் நடராஜருக்கு சந்நிதி இருக்கும். ஆனாலும் சிதம்பரம் நடராஜர் சந்நிதியை விசேஷமாக குறிப்பிடுகிறோம். காரணம் அத்தலத்தில் சிவன் உமையவளுக்காக திருநடனம் ஆடியதும், பதஞ்சலி, வியாக்ரபாதர் போன்ற முனிவர்களுக்கு காட்சியளித்ததும் சிறப்பானவை. இதுபோன்ற தலங்களில் சிறப்பின் அடிப்படையில் தெய்வ சான்னித்யம் அதிகமாக இருப்பதால் அங்கு சென்று வழிபடுவது தான் நல்லது. அதற்காக உள்ளூர் தெய்வத்தைக் குறைவாக நினைப்பது கூடாது. உள்ளூர் கோயிலில் தினப்படி தரிசனம். சிறப்புத் தலங்களில் ஏறுபடி தரிசனம். எல்லா நாட்களும் ஒரே மாதிரிதான், பொழுது விடிந்து பொழுது சாய்கிறது. நம் வாழ்க்கை முறையும் ஒரே மாதிரி தான். இருந்தாலும், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் இயல்பான வாழ்க்கை முறையை நாமே மாற்றிக் கொள்வது போலத் தான்!

No comments:

Post a Comment