Wednesday, July 9, 2014

மனதை ஒருநிலைப்படுத்த பக்தி மார்க்கத்தில் இடம் இருக்கிறதா?

** மனதை ஒருநிலைப்படுத்த பக்தி மார்க்கத்தில் இடம் இருக்கிறதா?பக்தி மார்க்கத்தின் அடிப்படையே மனதை ஒருநிலைப்படுத்துவது தானே. மனம் என்பது விசாலமானது. எவ்வளவு விஷயங்களை வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளும் ஆற்றல் அதற்குண்டு. காது கேட்பது, கண் பார்ப்பது, மூக்கு நுகர்வது, வாய் பேசுவது, நாக்கு சுவைப்பது என எல்லாவற்றையும் மனம் தான் நமக்கு அறிவுறுத்துகிறது. ஒரு பாடலைக் கேட்கும்போது, அது இன்ன பாடல், இன்னார் பாடுகிறார் என்ற விபரங்களை மனம் தான் முதலில் அறிந்து அறிவுக்குத் தெரியப்படுத்து கிறது. ஒரு விஷயத்தை ஆழ்ந்து மனம் சிந்திக்கத் தொடங்கி விட்டால், கண் திறந்திருந்தாலும் காட்சிகளைப் பதிவு செய்யாது. அதிக நேரம் ஆடாமல், அசையாமல் தியானம் செய்யப் பழகினால் மன ஒருநிலைப்பாடு கைகூடும். இறையருளுடன் மற்ற செயல்களை முழுக் கவனத்துடன் செய்து வெற்றி பெற இந்தப்பயிற்சி உதவும்.

No comments:

Post a Comment