Thursday, July 10, 2014

சுவாமிஜியின் நெத்தியடி!

விவேகானந்தர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அதில் பயணித்த இரு ஆங்கிலேயர்கள், அவருடைய காவி உடை, முகத்தோற்றத்தை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருப்பதால், விவேகானந்தரால் புரிந்து கொள்ள முடியாது என்பது அவர்களின் எண்ணமாக இருந்தது.
சிறிது நேரத்தில் வண்டி நிற்கவும், ரயில்வே அதிகாரி ஒருவர் அதில் ஏறினார். அவரைக் கண்ட விவேகானந்தர் அழகாக ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார்.
பயத்தில் முகம் வெளிறிப் போன ஆங்கிலேயர்கள்,
தங்களைப் பற்றி அதிகாரியிடம் விவேகானந்தர் சொல்வார் என எதிர்பார்த்தனர். ஆனால், கடைசிவரையில்
விவேகானந்தர் சொல்லவே இல்லை.
பயத்துடன் அவர்கள் விவேகானந்தரை அணுகினர்.
""ஆங்கிலம் தெரிந்திருந்தும் ஏன் எங்களைக்
கோபித்துக் கொள்ளவில்லை?'' என்றனர்.
"" முட்டாள்களைப் பார்ப்பது இது ஒன்றும் எனக்கு முதல் முறை இல்லையே!'' என்று புன்முறுவலுடன், அதே நேரம் நெத்தியடி கொடுத்தார் சுவாமிஜி.
உண்மையில் விவேகானந்தர் அப்போதும் கோபித்துக் கொள்ளவில்லை. நீங்கள் பேசிய இழிசொற்கள் தனக்கு உரியதல்ல என்பதை மட்டும் தெளிவுபடுத்தினார்.
விவேகானந்தரிடம் ஆங்கிலேயர்கள் மன்னிப்பு கேட்டனர்.

No comments:

Post a Comment