Friday, July 18, 2014

ஒரு பந்தம் தேவை.

ஒரு பந்தம் தேவை.
இராமகிருஷ்ண பரமஹம்சருக்கு சாப்பாட்டில் ஆர்வம் உண்டு அடிக்கடி சமையல் அறைக்கு சென்று மனைவி சாரதாதேவியாரிடம் என்ன சமையல் என்று விசாரிப்பார். ஒரு நாள் அன்னையார் அவரிடம், ''நீங்கள் எவ்வளவு பெரிய ஞானி?யார் யாரெல்லாமோ உங்களைப் பார்க்க வருகிறார்கள். நீங்கள் அடிக்கடி சமையல் அறைக்கு வருவதைப் பார்த்தால் அவர்கள் என்ன நினைப்பார்கள்?'' என்று கேட்டார்.
பரமஹம்சர் சிரித்துக் கொண்டே சொன்னார், ''நான் எல்லாப் பற்றுக்களையும் எப்போதோ உதறி விட்டேன். இருந்தாலும் என்னைப் பூமியுடன் இணைக்க ஒரு பந்தம் தேவை. எல்லாக் கயிற்றையும் அவிழ்த்து விட்டால் படகு ஆற்றோடு போய்விடும். அதைக் கரையுடன் கட்டி வைக்க ஒரு கயிறு தேவை. என் கயிறு இதுதான் என் பணி முடிந்தவுடன் இந்தக் கயிற்றையும் அவிழ்த்து விடுவேன். என்றைக்கு நான் சமையல் அறைக்கு வந்து இப்படி விசாரிக்கவில்லையோ அன்றிலிருந்து மூன்றாவது நாள் நான் இந்த உலகை விட்டுப் போய் விடுவேன் என்று பொருள்,'' என்றார்.
அதேபோல் ஒருநாள் அவர் சமையல் அறைக்கு வராததைக் கண்டு அன்னையார் வந்து பார்த்தபோது அவர் கண் மூடிப் படுத்திருந்தார். அவர் பணிகளை விவேகானந்தரிடம் ஒப்படைத்து விட்டார், காரணத்தை அறிந்த சாரதாதேவி கண்ணீர் மல்கினார். அடுத்த மூன்றாம் நாள் அவர் உயிர் பிரிந்தது.
ஞானம் பெற்ற ஞானிகள் மிகவிரைவாக இந்த பூமியை விட்டு விடைபெற்று விடுகிறார்கள். சிலநாட்கள் கர்மாகளை உருவாக்கி அவர்கள் வாழ்வது நம்மீது உள்ள கருணையினால் தான்,

No comments:

Post a Comment