Wednesday, July 9, 2014

வாஸ்து பார்ப்பதை சாஸ்திரம் அனுமதிக்கிறதா? அது அந்த காலத்தில் பின்பற்றப்பட்டதா?

* வாஸ்து பார்ப்பதை சாஸ்திரம் அனுமதிக்கிறதா? அது அந்த காலத்தில் பின்பற்றப்பட்டதா?
சாஸ்திரங்களில் வாஸ்து பார்ப்பதும் ஒன்று. கோயிலை மையமாக வைத்து ராஜாவின் அரண்மனை, குடிமக்கள் வாழும் இடம், வீட்டின் அமைப்பு எல்லாமே வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டன. ஆனால், மரபில் இருந்து முரண்பட்டு, நன்றாக கட்டப்பட்ட வீட்டை இடிக்கச் சொல்வது, வியாபார ரீதியாக வாஸ்து சாஸ்திரத்தை வளைக்க முயல்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது கூடாது.

* மூன்று தெருக்கள் சந்திக்கும் இடத்தில் "வாஸ்து கணபதி' வழிபாடு செய்தால் நல்லது என்கிறார்களே! உண்மையா?
இப்படிப்பட்ட இடத்தில் வீடு கட்ட நேர்ந்தால் விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபடுவது காலம் காலமாக உள்ள ஒன்று தான். ஆனால், அவருக்கு "வாஸ்து கணபதி' என்று புதிய பெயரிட்டு விட்டார்களே என்று தான் வருத்தமாக உள்ளது.

No comments:

Post a Comment