Saturday, July 19, 2014

பதினெட்டில் அப்படி என்ன விசேஷம் உள்ளது?

பதினெட்டு என்று கேட்டவுடன் அனைவரின் கவனமும் ஒரு நிமிடம் நின்று செல்லும். அதில் அப்படி என்ன விசேஷம் உள்ளது? ஒரு சிறு ஆராய்ச்சி நடத்திய போது கிடைத்த பெரியவர்களின் விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!
* பதினெட்டில் இருக்கும் ஒன்றும் எட்டும் இரு நிலைகளை குறிக்கும். ஒன்றுசூரியனுக்கும் எட்டு சனிக்கும் உடைய எண்கள். மனித வாழ்க்கையில் அனைத்தையும் அருள்கிற சூர்யனும் வாழ்கையின் முடிவை தீர்மானம் செய்கிற சனியும் அனைவரையும் கட்டுப்படுத்துக்கிறார்கள் . ஒன்றும் எட்டும் கூட்டினால் வருவது ஒன்பது. ஒன்பது மகாசக்திக்கு தொடர்பு உடைய எண். அஷ்டமா சித்திகளையும் அடைகிற சித்தர்கள் அதிலே நிற்காமல் அதற்கு மேலே செல்ல தவம் இருப்பார்கள். அதன் மேல்நிலைக்கு முதல் படி மகாசக்தி நிலை.
* குண்டலினி யோகத்திலும், குண்டலினி சகஸ்ராரத்தை அடைந்த பிறகுமேலும் பதினெட்டு வித்யாக்களை கடக்க வேண்டி உள்ளது. இந்த பதினெட்டு மகா வித்யாக்களும் சகாஸ்ராரத்தை சுற்றி இருக்கும் சக்தி பெற்ற ஆதாரங்களாக விளங்குகின்றது. கடைசியில் குண்டலினி சிவத்தோடு கலக்கும் மய்துன யோகத்தில் இது நிலைக்கும். காக புசுண்டரின் பாடல் அதை தெளிவாக்குகிறது. "காணப்ப தலமெல்லாம் அண்ட வுச்சி, கமலமடா பதினெட்டாங் கோட்டிற் சென்று".
* தமிழ் சித்தர்கள் பதினெட்டு சித்தர்கள் என்றும் மகாசித்தர்கள் என்றும்அழைக்கப்பட காரணம் அவர்கள் தங்கள் குண்டலினி யோகத்தில் பதினெட்டு மகா வித்யாகளை கடந்து வந்தவர்கள் என்பதேஅகும்.
"வாலை" என்ற குண்டலினி சக்தியின் மேனியின் உறுப்புகளாகப் பதினெட்டு எழுத்துக்கள் அமைந்திருக்கின்றன என்று சட்டைமுனி சித்தர் கூறுகிறார்.
* இதுகாறும் சித்தயோகதிலிருந்தும் சித்தமருதுவதிலும் காட்டபடுகின்ற அகச்சான்றுகளால் பதினெட்டு சித்தர் என்பதில் உள்ள "பதினெட்டு" என்பது சித்தர்களின் எண்ணிகையை குறிக்கவில்லை; அவர்கள் பெற்ற பேறுகளை குறிக்கின்றது.
* சித்த மருத்துவத்தில் தேகம் என்பது கீழ்கண்ட பதினெட்டு உறுப்புகளை கொண்டதாகும். ஐந்து மகாபூதங்கள் (வான், வளி, தீ, நீர், மண்), ஐந்து ஞானஇந்திரியங்கள் (செவி, தோல், நாக்கு, கண், காது), ஐந்து புலனுணர்வுகள் கேட்டல், தொடுதல், காணல், சுவைத்தல், முகர்தல்) இவற்றோடு புத்தி, மனம், அகங்காரம் என்று மொத்தம் பதினெட்டு. இவை அனைத்தையும் வென்றவரும் சித்தர் என்று அழைக்கபடுவர்.
*அஞ்செழுத்திலே பிறந்து
அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற
பஞ்ச பூத பாவிகாள்
அன்செழுத்தில் ஓரெழுத்தை
அறிந்துகூர வல்லிரேல்
அஞ்சல் அஞ்சல் என்றுநாதன்
அம்பலத்தில் ஆடுமே!
திருச்சிற்றம்பலம்!

No comments:

Post a Comment