Thursday, July 17, 2014

மௌனவிரதம்

மௌனவிரதம் - பகவான் ஶ்ரீ சத்திய சாய்பாபா !!!!!!

ஆத்மாவை ஒளிபெறச் செய்வதே மெளனம் என்று சொல்லப்படும் அது வாயை மூடிக்கொண்டிருப்பது மட்டும் அல்ல,மெளனம் என்பது தியானத்தில் மிக உயர்ந்ததாகும் அதனால் மெளனம் விரதம்இருப்பவர்கள் கண்ணை விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தாலும், பார்வையை உள்முகமாத் திருப்பிக் கொள்கிறார்கள். அவர்கள் பேசாமல் இருப்பது மட்டும் அமைதி அல்ல. தன்னைச் சுற்றிலும் அமைதியைத் தேடிக்கொண்டு தமது மனத்துக்குள்ளும் அவர்கள் அமைதியை நாடுகிறார்கள் அதனால் ஆச்சாரிய புருஷர்கள் மெளன விரதம் கடைபிடிப்பதை மிக முக்கியமாகக் கொள்கிறார்கள்.

மெளன விரதம் என்பது வாய் பேசாதிருப்து மட்டும் அல்ல,சிந்தனையை எல்லாம் கட்டுக்குள் வைப்பதே மெளன விரதம் அதனால் மெளன விரதம் இருப்பவர்கள் கையால் காகிதத்தில் எழுதிக்காட்டுவது. ஜாடை செய்வது ,முக பாவனையாலும்,தலை அசைப்பினாலும் உணர்த்த முயல்வது போன்றவைகளில் ஈடுப்பட்டால் மெளன விரதத்தை கடைப்பிடிப்பதாக கொள்ளமுடியாது.

அமைதி என்பது அது எப்போதும் நம்முடன் இருக்கிறது. அது நம்க்குள்ளேயும் இருக்கிறது. ஆகையால் அதை நாம் அடையாளம் கண்டுகொண்டு பயன் பெற வேண்டும். அதற்குரிய முயற்சியும், பயிற்சியுமே மெளன விரதம் ஆகும்.

நம்முடைய இந்திரியங்களிலேயே அதிக சக்தி வாயந்தது நாக்கு. அதனாலேயே நமக்கு தடைகளை ஏற்படுத்தி சாதனைகளில் குறுக்கிடும் விஷமத்தனமும் அதில் அடங்கி இருக்கிறது. அதை ஒடுக்கவே மெளனத்தை நாம் ஆயுதமாகப் பயன்படுத்துகிறோம். வாயச்சொல் ஒடுங்கும்போது அது நம் வழிக்கு வருகிறது. மற்ற சிந்தனைகளிலிருந்து திரும்பி நாவடக்கம் பெறுகிறது. நாக்கு ஒய்வு பெறும்போது மூளையின் சக்தியும் விழித்துக்கொண்டு ஓய்வு பெறுகிறது. கூர்ந்து சிந்திக்கவும்,மனத்தை அடாமல் வைத்துக் கொள்ளவும் அது முயல்கிறது அந்த நிலையில் இறைவனை பற்றி நினைத்து சமாளிப்பதும் எளிதாகிறது அதனாலேயே மெளன விரதம் பக்தி மார்கத்தில் ஒரு முக்கியமான சாதனமாகப் பயன்படுகிறது.

No comments:

Post a Comment