Monday, August 18, 2014

பூணூல் மூன்று விதமாக அணிந்து கொள்ளப்பட வேண்டும் /பூணூல் தயாரிக்கும் முறை

யக்ஞோபவீதம் (பூணூல்)
(’வேதமும் பண்பாடும்’ நூலிலிருந்து)

பூணூல் என்பது சமஸ்கிருதத்தில் யக்ஞோபதவீதம் என்று அழைக்கப்படுகிறது. உபநயனத்தின் போது வடுவுக்கு பிரம்மம் அறிமுகப்படுத்தப்பட்டு அதன் பின்னர் அவன் த்விஜன் என அழைக்கப்படுகிறான். அதாவது உபநயனத்தின் போது அவன் இரண்டாவது பிறப்பைப் பெறுகிறான். அது முதல் பருத்தி நூலின் மூன்று இழைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பூணூலை அவன் அணிந்து கொள்கிறான்.

திருமணமாகாத பிரம்மச்சாரிகள் மூன்று இழைகள் கொண்ட ஒன்றைப் பூணூலையும், திருமணமானவர்கள் ஆறு இழைகள் கொண்ட இரண்டு பூணூலையும், அணிந்து கொள்ள வேண்டும்.

சில சிறப்புக் காரணங்களுக்காக சிலர் 9 இழைகளைக் கொண்ட 3 பூணூலை அணிந்து கொள்ளும் பழக்கமும் காணப்படுகிறது.

பூணூல் மூன்று விதமாக அணிந்து கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அவை வருமாறு -
1. உபவீதம் - இது இயல்பான முறையாகும். உதாரணத்திற்கு நாம் வீட்டில் சாதாரணமாக இருக்கும் போது இடதுதோள்பட்டையின் மேல் பகுதியிலிருந்து வலதுபுறம் கைப்பகுதிக்கு அணிந்து கொள்வது. இந்தப் பொதுவான முறை உபவீதம் எனப்படுகிறது.

2. ப்ராசீனாவீதம் - பித்ரு கார்யங்கள் செய்யும் போது பூணூல் ப்ராசீனவீதமாக அணிந்து கொள்ளப்பட வேண்டும். ப்ராசீனாவீதத்தின் போது வலது தோள்பட்டையின் மேல் பகுதியிலிருந்து இடது கை வரை கீழ்நோக்கி பூணூல் இருக்கும். தர்ப்பணம் அல்லது ச்ராத்தம் செய்யும் போது கர்த்தா இவ்வாறு அணிந்து கொண்டிருப்பதை பார்க்கலாம்.

3. நிவித்தம் - பூணூலை அணிந்து கொள்ளும் மூன்றாவது முறை நிவித்தம் என்றழைக்கப்படுகிறது. பூணூலை கழுத்தைச் சுற்றி மார்பு வரையில் மாலை போல் அணிந்து கொள்வதே நிவித்தம் எனப்படுகிறது.
* தற்காலத்தில் நாம் சட்டை அணிந்து கொண்டு வெளியே போகும் போது பூணூலை இவ்வாறு அணிந்து கொள்ள வேண்டும்.
* இதே போல் இயற்கை உபாதைகளை கழிக்கும் போதும், உடலைச் சுத்தப்படுத்திக் கொள்ளும் போதும் நிவித்தமாக பூணூலை போட்டுக் கொள்ள வேண்டும்.
* இறந்தவர்கள் வீடுகளுக்கு 10 நாட்களுக்குள் சென்று துக்கம் விசாரிக்கும் போதும் பூணூலை நிவித்தமாகத்தான் போட்டுக் கொள்ள வேண்டும்.

பூணூல் தயாரிக்கும் முறை :

யக்ஞோபவீதம் என்பது உபநயனத்தின் போது அணிந்து கொள்ளப்படுவதாகும், இந்தப் பூணூல் தயாரிக்கப்படும் முறை மிகவும் சுவாரஸ்யமானதாகும். வேதம் கற்றுக் கொடுக்கத் தகுதி உள்ளவர்களும், திருமணமான பெண்களும் பூணூல் தயாரிக்கத் தகுதி உடையவர்களாவர். பருத்தியால் ஆன நூலை ஒரு சுத்தமான இடத்தில் உட்கார்ந்து கொண்டு. அதனை விரல்களைச் சுற்றி வலதுபுறமாக சுற்ற வேண்டும். இவ்வாறு 96 முறை சுற்ற வேண்டும். பின்னர் அதன் இரு முனைகளையும் பிடித்துக் கொண்டு மூன்றாக மடித்து சம அளவில் வருமாறு செய்ய வேண்டும். அதன் பின்னர் அந்த இரு முனைகளையும் சேர்த்து முடிச்சு போட வேண்டும். இவ்வாறு போடப்படும் முடிச்சுக்கு பிரம்ம முடிச்சு என்று பெயர். இந்த முடிச்சு போடும் போது ஒரு குறிப்பிட்ட மந்த்ரம் மௌனமாக ஜபிக்கப்பட வேண்டும். இடது தோள்பட்டையிலிருந்து வலது கைப் பகுதிக்கு குறுக்காக வருமாறு பூணல் அணியப்பட வேண்டும்.

இந்தப் பூணூல் தொப்புளுக்கு கீழே இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் அதை தொப்புள் வரை இருக்குமாறு மடித்து முடிச்சு போட்டுக் கொள்ளலாம்.

மேலே கூறப்பட்டது போல் பிரம்மச்சாரிகள் ஒற்றை பூணுலையும், கிரஹஸ்தர்கள் இரண்டு பூணூல்களையும் போட்டுக் கொள்ள வேண்டும்;.

கிரஹஸ்தர் ஒருபோதும் த்ருதீய வஸ்த்ரம் எனப்படும் மூன்றாவது வஸ்த்ரம் இல்லாமல் இருக்கக்கூடாது. ஆனால் சிலர் த்ருதீய வஸ்த்ரம் அணிந்து கொள்ளாமல் இருப்பார்கள். த்ருதீய வஸ்த்ரத்திற்கு பதிலாக மூன்றாவது பூணூல் அணிந்து கொள்வதை சிலர் பழக்கமாகக் கொண்டுள்ளனர்,

யக்ஞோபவீதம் போட்டுக் கொள்வதற்கான விதிமுறைகள்
பூணுல் அறுந்து போய் விட்டாலோ அல்லது பயனற்றதாகிவிட்டலோ புதிய பூணுலை முறைப்படி அதற்கான சங்கல்பங்கள் மற்றும் மந்திரத்தைக் கூறி மாற்றிக் கொள்ள வேண்டும்.

உபநயனம் ஆன பின்னர் பூணூல் இல்லாமல் செய்யப்படும் எந்தவொரு கர்மாவும் உரிய பயனைத் தராது.

4 comments:

  1. பிரம்ம முடிச்சு போடுவது எப்படி, போடும்போது மவுனமாக சொல்ல வேண்டிய மந்திரம் கூறவும். நன்றி.

    ReplyDelete
  2. எந்த நாளில் பூணால் போடக்கூடாது என்பதை தெரிவிக்கவும்

    ReplyDelete
  3. பூணூல் அணியும் மநமந்திர கூறவுமகூ

    ReplyDelete