Tuesday, August 19, 2014

எது மூட நம்பிக்கை ??

எது மூட நம்பிக்கை ??
இரு நண்பர்கள் ஒரு காரில் சென்று கொண்டிருந்தார்கள் அதில் ஒருவர் மருத்துவர் மற்றும் தன் நெருங்கிய நண்பரும் கூட . தனக்கு எந்த ஒரு பிரச்சனை என்றாலும் தன் மருத்துவ நண்பரிடம் மட்டுமே பகிர்ந்து கொள்வார். அப்போது மணி நள்ளிரவு பணிரெண்டு நுப்பது இருக்கும் , கார் ஒரு அடர்ந்த காட்டின் வெளியே சென்று கொண்டிருக்கிறது திடிரென்று ஒரு நண்பருக்கு நெஞ்சு வலி வருகிறது அவர் அந்த மருத்துவ நண்பரிடம் தன் நெஞ்சை பிடித்தவாறு தனக்கு வலி நிவாரணி மாத்திரை ஒன்று தரும்படி கேட்கிறார் சிறிது நேரம் எதையோ தேடி பிடித்து ஒரு வட்ட வடிவான மாத்திரையை எடுத்து நீ இதை முழுங்காமல் வாயிலே வைத்து உதப்புமாறு கொடுக்கிறார் அவரும் அப்படியே செய்கிறார் சிறுது நேரத்தில் அவருடைய வலியும் குறைகிறது. இருவரும் வீட்டை அடைந்தார்கள் . அந்த நண்பர் தன் மருத்துவ நண்பரிடம் என் மகளுக்கும் இரண்டு நாளாய் உடம்பு சரி இல்லை அவளுக்கும் ஒரு ஊசி போடுமாறு கேட்டு கொண்டார் உடனே அவர் நான் எனது மருந்து பையை என் வீட்டிலேயே வைத்து விட்டு வந்துவிட்டேன் என்றார் . அப்போ எனக்கும் மட்டும் எப்படி மாத்திரை தந்தாய் என்று கேட்டார் , அதற்க்கு அந்த மருத்துவர் நண்பர் நான் எப்போது உனக்கு மாத்திரை தந்தேன் நீ வாயில் போட்டு உதப்பியது என் கோட்டில் உள்ள பொத்தானை தான் என்றார் சிரித்து கொண்டு , பின் எனக்கெப்படி வலி சரியானது என்று கேட்டார் அப்பாவியாக..மருத்துவ நண்பர் சொன்னார் அது தான் நீ என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் உன்னை காப்பற்றியது என்றார்.
எதெற்கெடுத்தாலும் , எதையெடுத்தாலும் மூட நம்பிக்கை என்று கூவல் விடும் பகுத்தறி வியாதிகளே சாதாரண பொத்தானை சாப்பிட்டால் எப்படி நெஞ்சு வலி குறையும் என்று கேட்பது தான் உங்களது பகுத்தறிவு , ஆனால் தன் நண்பன் எது தந்தாலும் அது நம் நன்மைக்கே என்று சாப்பிட்டாரே அவரே பக்திமான் அவரின் நம்பிக்கையே தூய பக்தி என்று கூறுவது தான் ஆன்மிகம்.
சிந்தியுங்கள்

No comments:

Post a Comment