Sunday, September 14, 2014

அம்பிகையை "என்னடி அபிராமி' என்று பாடுவது சரிதானா?

** பக்திப் பாடல்களில் ஜகன்மாதாவான அம்பிகையை "என்னடி அபிராமி' என்று பாடுவது சரிதானா?
பக்தி அல்லது அன்பு மேலீட்டால் நம்மை விடப் பெரியவர்களையும் ஒருமையில் அழைக்கலாம். இம்முறை பல நூல்களிலும் காணப்படுகிறது. தேவார, திருவாசகம், திவ்ய பிரபந்தம் போன்றவற்றிலும் கூட கடவுளை ஒருமையில் குறிக்கும் முறையைக் காணலாம். தாய், தந்தை, மாமன், மாமி போன்ற நெருங்கிய உறவினர்களையும் "நீ' என ஒருமையில் அழைக்கும் வழக்கம் இன்னும் உள்ளது. அடா, அடீ போன்றவை பக்தி இலக்கியங்களில் காணப்படாவிட்டாலும், பிற்காலப் புலவர்களால் கையாளப்பட்ட சொற்களாகி விட்டன. அன்பின் மிகுதியால் ஏற்படும் உரிமை என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் தவறாகத் தெரியாது. சிறு குழந்தைகள் மழலைச் சொற்களில் பெற்றவர்களை இது போல அழைத்தால் மகிழ்ச்சி தானே உண்டாகிறது. இது போன்று "என்னடி அபிராமி' என்று அழைத்தால் ஜெகன் மாதாவான அம்பிகையும் மகிழத் தான் செய்வாள்.

No comments:

Post a Comment