Thursday, September 18, 2014

அவ்வையாரின் அறிவுரை

அவ்வையாரின் அறிவுரை
பயனில்லாத பொருள்களை நாம் தூக்கி எறிவது போல், பயனற்றவர்களின் அன்பையும் உதறித் தள்ளுவதே அறிவுடைமை.
ஒருவர் பலமுறை கூறி, அதன் பின் செயலை செய்து முடிப்பது பண்பாகாது. தானேதனது கடமையைச் செய்ய வேண்டும்.
மன எழுச்சியைப்பெற அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்வது சரியான வழி முறையாகும்.
பெரியோர் இருக்குமிடத்தில் பேசும் போது நம் வாதங்களை, முகத்தில் அடித்தால் போல் நிதானமிழந்து கூறுவதை தவிர்க்க வேண்டும்.
கணவனைக் காத்தல், வீட்டைக் காத்தல், அறத்தைக் காத்தல், அன்பைக் காத்தல் என நல்லனவற்றைக் காப்பதே பெண்ணுக்கு அழகு.
தீயவனவற்றைக் காப்பாற்றக் கூடாது, அவை அழிவுக்கு காரணமானதாகும், நல்லனவற்றையே காத்தல் நம்மையும் ஒரு பொருட்டாக உலகம் மதிக்க வழி ஏற்படுத்தித் தரும்.
நல்ல நூல்கள் கூறும் கருத்துக்களையும், பெரியோர் கூறும் அறிவுரைகளையும் உள்ளத்தில் வைத்து காத்தல் வேண்டும்.

No comments:

Post a Comment