Monday, September 1, 2014

ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே...

ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே... என்று ஒரு வாக்கியம் உண்டு. இதற்கு, பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்றும், அழிக்கவும் முடியும் என்றும் (ஒரு குடும்பத்துக்கு நல்லது ஏற்படுத்துறதும் பெண்கள் தான், அதேசமயம் குடும்பத்துக்கு ஏதாவது தீங்கு வரப்போகுதுன்னா முன்கூட்டியே தெரிஞ்சுகிட்டு அதை அழிச்சு, குடும்பத்தைக் காப்பாத்தறதும் பெண்கள்தான்.) என்றும் விளக்கம் கூறுவர். சீதையால் ராவணனும், திரவுபதியால் கவுரவர்களும் அழிந்தனர் என்று உதாரணம் சொல்வர். அது, அவ்வளவு பொருத்தமானதல்ல. அம்பிகை, பராசக்தி பெண். அவள் தான் உலக மக்களை ஆக்கவும், காக்கவும், அழிக்கவும் வல்லமை படைத்தவள். அவள் இந்த மூன்று தொழில்களையும் திறம்பட நடத்தி வருகிறாள். அதனால், ஆவதும், அழிவதும் பெண்ணாலே என்பது இங்கு பொருந்தும். இதற்கான பல கதைகள் புராணங்களில் உள்ளன.

No comments:

Post a Comment