Tuesday, October 14, 2014

கடமையை செய் ! பலனை எதிர்பாராதே !

கடமையை செய் ! பலனை எதிர்பாராதே !
மேற்கண்ட தத்துவத்தின் அர்த்தத்தை பல நாத்திகவாதிகள் பெரியார் முதல் அவரின் அடிபொடிகள் கைத்தடிகள் வரை தவறாகவே விளக்கம் தருகின்றனர்.
அவர்களின் பகுத்தறிவு தரும் விளக்கம் இதுதான் :
நான் ஒரு முதலாளியிடம் வேலை செய்கிறேன், கடமை என்று கருதி வேலை மட்டும் செய்து விட்டு கூலியை எதிர்பார்க்காமல் இருக்கலாமா ? அல்லது அந்த முதலாளி கூலி தராமல் விட்டுவிட்டால் அதை எதிர்த்து கேளாமல் பணி செய்வது நமது கடமை என்று இருத்தலாகுமா ? எனவே கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது முட்டாள் தனமான காலத்திற்கு ஒவ்வாது கருத்து என மறுதளிப்பர்....
சரி அந்த சுயமரியாதை கும்பலிடம் எனது கேள்வி:
கடமை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் உரியதா ? அல்லது உழைக்கும் வர்க்கத்திற்கு மட்டுமே உரியதா ? கடமை என்பது முதலாளி தொழிலாளி, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு உடையதா ? ஆம் எனில் தவறானது உங்களின் கூற்று...........
கடமயை செய் ! பலனை எதிர்பாராதே ! என்பது சிறந்த பொதுவுடைமை கருத்து... மார்க்ஸ் , எங்கெல்ஸ், மாவோ, லெனின் போன்றோர் கூறியதற்கும் முன்பாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னதாகவே சிறந்த பொதுவுடைமை கருத்து தன கடமையை செய் ! பலனை எதிர்பாராதே !
கரணம் !
உழைப்பது என்பது தொழிலாளியின் கடமை எனில் அந்த உழைப்பின் மூலம் ஆதாயம் அடைபவனின் (முதலாளியின்) கடமை என்ன ? அந்த உழைப்பாளியின் உழைபிர்க்கேற்ற அந்த உழைப்பின் மதிபிற்கேற்ற கூலியை தரவேண்டியது முதலையின் கடமை அல்லவா ? ஆக தொழிலாளியும் முதலாளியும் ஒருங்கே தனது கடைமையை செய்யும் பொழுது பயன் என்பது தானாக கிடைகின்றது.
தொழிலாளியின் கடமை முடியும் போது முதலாளியின் கடமை துவங்குகிறது.
இதில் ஒருவர் தனது கடமையை தவறினாலும் அது அம்மனிதர்களின் தவறே ஒழிய, பொதுவுடைமை கொள்கையான கடமையை செய் ! பலனை எதிர்பாராதே ! என்ற கோட்பாடின் தவறல்ல........

No comments:

Post a Comment