Monday, November 10, 2014

விநாயகர்-கொழுக்கட்டையின் தத்துவம்


விநாயகர்-கொழுக்கட்டையின் தத்துவம்
---------------------------------------------------------
1. உட்பொருள்
>> விநாயகருக்கு மிகவும் விருப்பமானது ”கொழுக்கட்டை” ஆகும். இதில் வைக்கப்படுகிற பூரணம்-தேங்காய்த்துருவல், வெல்லம், எள், ஏலக்காய் முதலிய சுவை மிக்க பொருள்களின் கலவையாகும்.
>> பூரணம் எனபது நிறைவானது என்ற பொருளாகும். வெள்ளையான மாவுப்பகுதி தூய மனமாகும்.
>> அதில் நிறைந்துள்ள தேங்காய்த் துருவல் பூரணம், மனம் முழுவதும் நிறைந்துள்ள தூய பக்தியை குறிக்கிறது. இதுதான் கொழுக்கட்டையின் தத்துவம் ஆகும்.
>> அதாவது மனம் நிறைந்த பக்தியுடன் இறைவனைத் தொழுவதே மிகச் சிறந்த வழிபாட்டு முறையாகும். இதைக் “கொழுக்கட்டை” தெரிவிக்கிறது. தேங்காய் “பூரணமாகிறது” விநாயகருக்கு உகந்ததாகிறது.
2. வடிவ அமைப்பு
>> கொழுக்கட்டையின் கூர்மையான முன் பகுதி, விநாயகர் கூரிய புத்தியை அருள்வார் என்பதைத் தெரிவிக்கிறது.
>> கொழுக்கட்டையின் வெள்ளை நிற வெளிப்பகுதி, எல்லோருக்கும் தெளிவான உள்ளம் தருவார் என்பதைத் தெரிவிக்கிறது.கொழுக்கட்டையின் உட்புறத்தில் இனிப்பான பகுதியோ, கணபதி எப்போதும் இனிய அருள் வழங்குவார் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது.
>> எவரும் அதிகம் விரும்பாத வெள்ளெருக்கு மாலை, மருத்துவக் குணமுடைய அருகன் புல் அர்ச்சனை ஆகியனவும் விநாயகருக்குப் பிடித்தமானவையாகும். “மற்றவர்களால் கைவிடப்பட்டவர்களுக்கும் நான் ஆதரவாக நிற்பேன்’ என்பதை வெள்ளெருக்கு மாலை தெரிவிக்கின்றது.
“விநாயகரை வணங்கினால் நோய்கள் தீரும்; பிறவி நோயும் மாயும்’ என்பதை அருகன்புல் அர்ச்சனை அறிவிக்கின்றது. கணபதியைத் தொழுவோம்! கவலையெல்லாம் மறப்போம்!

No comments:

Post a Comment