Thursday, November 13, 2014

கந்தபுராணம் பிறந்த கதை!

கந்தசஷ்டி நன்னாளில் கந்தபுாரணத்தை அவசியம் படிக்க வேண்டும். முருகப் பெருமானின் வரலாற்றினை முழுமையாக எடுத்துரைப்பது கந்தபுராணம். வடமொழி நூலான சிவசங்கர சம்ஹிதையை தழுவி எழுதப்பட்டது இந்நூல். இதை இயற்றியவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கச்சியப்பசிவாச்சாரியார். இப்புராணத்தில் உற்பத்திக் காண்டம், அசுரகாண்டம், மகேந்திர காண்டம், யுத்தகாண்டம், தேவகாண்டம், தட்ச காண்டம் என்னும் ஆறு பகுதிகள் உள்ளன. 10ஆயிரத்து345 விருத்தப்பாக்களைக் கொண்டது. "திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்' என்னும் முதல் வரியை காஞ்சி குமரகோட்டத்தில் உள்ள முருகப்பெருமானே அடியெடுத்துக் கொடுத்த பெருமையுடையது. இந்தக் கோயிலில் தான் கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்நூலின் தொடர்ச்சியான உபதேசகாண்டம் குகனேரியப்ப நாவலரால் பாடப்பட்டது.
கம்பராமாயணம் மாணிக்கம் என்றால், கந்தபுராணம் நல்ல வேலைப்பாடுகளுடன் இழைக்கப்பட்ட மாணிக்கம் என்று பரிதிமாற்கலைஞர் (மதுரை சூரியநாராயண சாஸ்திரி) குறிப்பிடுகிறார்

No comments:

Post a Comment