Thursday, November 13, 2014

அரோஹரா'இதை ஏன் சொல்கிறார்கள்?

முருகன் கோயிலாகட்டும், சிவன் கோயிலாகட்டும் "அரோஹரா' என்ற கோஷம் கேட்கும். இதை ஏன் சொல்கிறார்கள்? இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? முக்தி (பிறப்பற்ற நிலை) அருளும் தலங்கள் நான்கு. திருவாரூரில் பிறக்க முக்தி; காசியில் இறக்க முக்தி; சிதம்பரத்தில் தரிசிக்க முக்தி; ஆனால், யாராக இருந்தாலும் நினைத்த அளவிலேயே முக்தி அருளும் தலமாக இருப்பது திருவண்ணாமலை. பஞ்சபூதத்தலங்களில் அக்னித்தலமாக விளங்குகிறது. இத்தலத்தில், "அண்ணாமலைக்கு அரோஹரா' எனச் சொல்லி சிவபெருமானை வணங்குவர். சிவனின் திருநாமங்களில் "ஹரன்' என்பதும் ஒன்று. இத்திருப்பெயரினை "ஹரன், ஹரன்' என அடுக்குத்தொடர்போல சொன்னார்கள் ஒரு காலத்தில்! அது "ஹர ஹர ஹர ஹர'' என்று மாறியது. பின்னர் "அரோஹரா' எனத் திரிந்தது. "ஹர ஹர' என்றால் "சிவனே சிவனே' என சிவ பெருமானை கூவி அழைப்பதற்கு ஒப்பாகும்.

No comments:

Post a Comment