Thursday, November 13, 2014

பஞ்ச கிருத்யம்'

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் இந்த ஐந்தும் இறைவன் செய்யும் தொழில்கள். இதனை "பஞ்ச கிருத்யம்' என்பர். இந்த தொழில்களை நடனமாடிய படியே செய்கிறார் சிவன். படைத்தல் தொழிலை இயக்க காளிகா தாண்டவத்தை திருநெல்வேலி தாமிர சபையிலும், காத்தல் தொழிலை அருள திருப்புத்தூர் (சிவகங்கை மாவட்டம்) சிற்சபையில் கவுரி தாண்டவமும், அழித்தல் தொழிலை மதுரை வெள்ளியம்பலத்தில் சந்தியா தாண்டவமாகவும், மறைத்தல் தொழிலை திரிபுர தாண்டவமாக குற்றாலம் சித்திரசபையிலும், உயிர்களுக்கு அருள் செய்ய ரத்தினசபையாகிய ஆலங்காட்டில் ஊர்த்துவ தாண்டவமாகவும் நிகழ்த்துகிறார். இந்த ஐந்து தொழில்களையும் ஒருசேர நிகழ்த்த, ஆனந்த தாண்டவமாக தில்லை (சிதம்பரம்) கனகசபையில் ஆடுகிறார்

No comments:

Post a Comment