Tuesday, November 11, 2014

யாமாமா நீ யாமாமா யாழீகாமா காணாகா....இது ஒரு தேவாரம் என்று சொன்னால்

யாமாமா நீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா"
இந்தப் பாடலின் முதல் வரியைப்
படித்துவிட்டு, அப்படியே இரண்டாம்
வரியை இறுதியிலிருந்து படித்துப்பாருங்
கள். அப்படியே மாறி வருகிறது. இதில்
ஏதாவது புரிகிறதா??
இது ஒரு தேவாரம் என்று சொன்னால்
நீங்கள் நம்புவீர்களா?
ஆம், அதுதான் உண்மை.
திருஞானசம்பந்தப்பெருமானின் தமிழ்
வன்மைக்கு ஒரு அற்புதமான சான்று தான்
இது! மூன்றாம் திருமுறையில்
"திருமாலைமாற்று" என்ற பெயரில்
இத்தகைய பதினொரு பாடல்கள்
அடங்கியுள்ளன. இலக்கண இலக்கியம்
தெளிவாகக் கற்றோருக்கு மட்டும்
புரியக்கூடிய வகையில் இயற்றப்படும்
இவ்வகைப்பாடல்கள்,"மடக்கு"
அல்லது "யமகம்" எனப்படும்.
காளமேகப்புலவர், அருணகிரிநாதர்
போன்றோரும், இத்தகைய
மடக்குகளை இயற்றுவதில் வல்லவர்கள்.
சரி, பாடலின் பொருள் என்ன, பார்ப்போமா?
முதலில் சந்திபிரித்துப் பார்ப்போம்,
யாம் ஆமா? நீ ஆம் ஆம், ஆயாழீ, காமா,
காண் நாகா!
காணாகாமா, காழீயா, மா மாயா, நீ
மா மாயா
யாம் ஆமா? = ஆன்மாக்களாகிய நாங்கள்
எங்களைக் கடவுள் என்பதா?
நீ ஆம் ஆம் = ஆம், நீதான் கடவுள்!
ஆயாழீ = பெரிய
யாழை மீட்டுபவனே (இதைப் பேரியாழ்
என்பர்.)
காமா = பேரழகனே,
காண் நாகா! = அனைவருங் காண
நாகங்களைப் பூண்டவனே!
காணா காமா = காமனைக் கண்ணால்
காணமுடியாதவாறு (எரியச்) செய்தவனே,
காழீயா = சீர்காழியில் உறைபவனே,
மா மாயா = மா எனப்படுகின்ற திருமகளின்
கணவனான மாயோனே,
நீ மா மாயா! = மிகப்பெரிதான,
மாயை முதலான மும்மலங்களிலிருந்து நீ
எம்மைக் காப்பாயாக!
ஞானசம்பந்தப்பெருமான்
எத்தனை அற்புதமான கருத்தை,
நமக்கெல்லாம் பொருளே புரியாத
இருவரிகளில் அடக்கிவிட்டார் பாருங்கள்!
இப்படி இன்னும் பத்துப் பாடல்கள் உண்டு.
அவை படிக்கப் படிக்கத் திகட்டாதவை.
மதம் சாராத
மொழியை மதத்தோடு ஒட்டுவானேன்?எல்
லா நெறிகளை வளர்த்தபோதும்,
தமிழ்மொழி, சைவத்துடன் மட்டும்
விசேடமாகக் குறிப்பிடப்படுவ
து ஏனென்று உங்களுக்கு சந்தேகம்
இருந்தால், இப்பாடலைப் படித்தபின்
அது உங்களுக்கு நிச்சயம் நீங்கியிருக்கும்.
அப்படியும் நீங்காவிட்டால்,
இப்பதிகத்தின் இறுதியில் ,
"தமிழாகரன்" (தமிழே உடலெடுத்துவந்தவ
ன்) என்றே சம்பந்தர் தன்
முத்திரையை பதிப்பதன்மூலம்,
சைவத்துக்கும் தமிழுக்கும் உள்ள
தொடர்பைப் புரிந்துகொள்ளுங்கள்!
பூழியர்கோன் வெப்பொழித்த
புகலியர்கோன் கழல் போற்றி!

No comments:

Post a Comment