Wednesday, November 19, 2014

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து'' ...


ஸுபாஷிதம் (நல்ல வார்த்தைகள் கொண்ட ஸ்லோகம்) ஒன்றைக் கேளுங்கள்.
சந்தோஷ: பரமோ லாப:
சத்சங்க: பரமா கதி:!
விசார: பரமம் ஞானம்
ஷமோ ஹி பரமம் சுகம் !!
இதை, ஒவ்வொரு வார்த்தையாகப் படித்தால் வாழ்க்கையின் தத்துவம் நமக்கு நன்றாக விளங்கும். உண்மையான, முழுமையான சுகத்தை அனுபவிப்பதற்கும் வழி தெரியும். இவ்வுலகிலேயே சுவர்க்கத்தை அனுபவிக்க முடியும் என்பதை முக்கியமாகத் தெரிந்து கொள்ளலாம்.
சந்தேகமே இருக்காது.
ஒரு மனிதன் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம். வைர, வைடூரியங்கள், அளவுக்கு தேவைக்கு மேலான வீடுகள், ஊர்திகள் எல்லாம் சம்பாதிக்கலாம். ஆனாலும், மேலும் மேலும் வேண்டும் என்ற எண்ணம் அவனிடம் இருந்து கொண்டே தான் இருக்கும். அதற்காக சம்பாதிப்பதை தவறென்று சொல்லவில்லை.
ஆனால், பணக்காரர்கள் வரிசையில் முதல் ஸ்தானத்தில் இருந்தாலும், மன நிறைவு இல்லாவிடில் மனதில்
சந்தோஷம் இருக்க வாய்ப்பே இல்லை. சந்தோஷமான, மகிழ்ச்சியுள்ள வாழ்வு அமைய, நம்முடைய
பெரியோர்கள் கூற்றுப்படி ""போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து'' ... அதாவது ""மன நிறைவு'' நம்மிடம் இருக்கவேண்டியது மிகவும் அவசியம். தானே உழைத்து சம்பாதித்து ஒரு கோப்பை கூழ் குடித்துவிட்டு மன நிறைவுடன் ஒரு சிறு குடிசையில் தலகாணியில் தலையை வைத்தவுடன் நிம்மதியாக உறங்கும் ஒரு ""ஏழை'' மனிதன் பெரியவனா, அல்லது அடுக்கு மாளிகையில் எல்லா வசதிகள் இருந்தும், மேலும் வேண்டும் வேண்டும் என்று உறக்கம் வராமல் தவித்துக்கொண்டு உறக்க மாத்திரைகள் விழுங்கும் பணக்கார மனிதர் உயர்ந்தவரா என்று சிந்தித்து பார்த்தால், இந்த சுபாஷித்தின் முதல் வரி சந்தோஷ:
பரமோ லாப: மூலம் நமக்கு கை மேல் பதில் தருகிறது.
"மன நிறைவு' இயல்பான குணமாக அமைவது மிக அவசியம். மன நிறைவு அடைவதற்கு மிக சுலபமான வழி இருக்கிறது. இறைவன் நமக்கு சேர வேண்டியதை கொடுத்திருக்கிறான் - கொடுப்பான் என்ற பூரண நம்பிக்கையுடன் நம் கடமைகளை ஆற்றினாலே போதும். மேலும், நல்ல மனிதர்களுடன் நாம் சகவாசம் வைத்துக்கொண்டால், நாமும் நல் வழியில் நடப்போம்.
திருடர்கள், அயோக்கியர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டால், நமக்கு நற்கதி என்பதை மறந்து விட வேண்டும். இதையே ஸுபாஷிதத்தின் இரண்டாவது வரியான "சத்சங்க: பரமா கதி:' என்பது குறிப்பிடுகிறது.
நாம் எவ்வளவோ விஷயங்கள் படிக்கிறோம், கேட்கிறோம். புதிய கலைகளையும், பாடங்களையும் கற்றுக்கொள்ளுகிறோம். இப்படி படித்தால் மட்டும் போதுமா? படித்த விஷயங்களை நன்கு ஊடுருவி பார்த்து, வாழ்க்கை நடைமுறையில் நாம் பின்பற்றுவதே உண்மையான அறிவாகும்

No comments:

Post a Comment