Sunday, November 16, 2014

பாதுகாப்பு கவசமாக விளங்கும். மந்திர ராஜம்'

விஷ்ணு சகஸ்ர நாமத்தில், பெருமாளின் கடைசி திருநாமம் "சர்வப்ரஹரணாயுத' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு ஆதிசங்கரர், "எம்பெருமானுக்கு எல்லாமே ஆயுதம்' என்று பொருள் கூறியுள்ளார்.
விஷ்ணு மற்ற அவதாரங்களில் ஆயுதத்தைக் கையில் தாங்கியிருக்க, நரசிம்ம அவதாரத்தில் மட்டும் ஆயுதம் ஏதும் வைத்துக் கொள்ளாமல் நகத்தையே ஆயுதமாக்கி இரண்யனை அழித்தார். அதனால், "சர்வப்ரஹரணாயுத ' என்ற திருநாமம் நரசிம்மனுக்குரியது என்கிறார் ஆதிசங்கரர்.
கோபக்கனல் தெறிக்கும் உக்கிர நரசிம்மர், தாயாரோடு இருக்கும் போது, <கோபம் தணிந்து அருளை வாரி வழங்கும் லட்சுமி நரசிம்மராக மாறி விடுகிறார். இவருக்குரிய மந்திரத்திற்கு "மந்திர ராஜம்' என்று பெயர்.
இந்த மந்திரத்தின் கடைசி பகுதியான ""உக்ரம் வீரம் மகாவிஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோ முகம் ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்'' என்பதை தினமும் 11 முறை சொல்ல விரும்பிய அனைத்தும் எளிதில் கிடைக்கும். வெளியில் செல்லும் போது பாதுகாப்பு கவசமாக விளங்கும்.

No comments:

Post a Comment