Sunday, November 16, 2014

தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருமாலை பாசுரத்தில் மட்டும் ராமருக்கு அணில் செய்த சேவை பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது

வால்மீகி, கம்பர், துளசிதாசர் ஆகியோர் எழுதிய ராமாயணங்கள் புகழ் மிக்கவை. இந்த மூன்றிலும் இல்லாத செய்தி ஒன்று செவி வழிக்கதையாக நம் நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. பாலம் கட்டும் போது ராமருக்கு அணில் உதவி செய்ததாகவும் அதன் தன்னலமற்ற சேவையைக் கண்ட, ராமர் அதன் முதுகில் தடவிக் கொடுத்து நாமம் இட்டு மகிழ்ந்ததாகவும் சொல்வர். பக்தியுடன் செய்யும் சிறு பணியையும் இறைவன் ஏற்று அருள்புரிவார் என்பதை இதன் மூலம் உணர முடிகிறது. ஆழ்வார்களில் ஒருவரான தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருமாலை பாசுரத்தில் மட்டும் ராமருக்கு அணில் செய்த சேவை பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment