Tuesday, November 18, 2014

பிறர் துன்பம் தீர்ப்பது தான் கடவுளுக்குச் செய்யும் தொண்டு

கடவுளை பழித்துப் பேசும் ஒருவர் இருந்தார். ஒரு கட்டத்தில், வாழ்வின் சுமையைத் தாங்க முடியாமல் கோயிலுக்கே சென்று விட்டார். கடவுளை தரிசித்து விட்டு அங்கிருந்த துறவியைச் சந்தித்தார்.
""சுவாமி! இவ்வளவு காலம் அறியாமல் இருந்து விட்டேன். என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்று வேண்டினார்.
""அப்படியே ஆகட்டும்'' என்றார் துறவி.
துறவியின் சீடன் ஒருவன் இதைத் தடுத்தான்.
""வேண்டாம் குருவே! கடவுளை இகழ்ந்த இவனை ஏற்பது கூடாது. செய்த தவறுக்கு தண்டனை அனுபவிப்பது தான் சரி. அவன் வாழ்வில் துன்பப்படத் தான் வேண்டும்'' என்றான்.
துறவி சிரித்தார்.
""இதோ பாரப்பா! கடவுள் "இல்லை' என்று மறுப்பதற்கு எந்த சிந்தனையும் தேவையில்லை. "உண்டு' என்று சொல்வதற்கு தான் அறிவும், அனுபவமும் தேவைப்படுகிறது. சிலர் இவரைப் போல "எடுப்பார் கைப்பிள்ளை'யாகி வாழ்வில் தவறான முடிவுக்கு ஆளாகிறார்கள். மனம் வருந்தி கடவுள் பக்கம் திரும்பிய இவரையும் நம்மோடு சேர்த்துக் கொள்வது தான் ஆத்திகம். அனைவர் மீதும் அன்பு காட்டுவதே ஆன்மிகத்தின் அடிப்படை. பிறர் துன்பம் தீர்ப்பது தான் கடவுளுக்குச் செய்யும் தொண்டு,'' என்று விளக்கம் அளித்தார்.
அன்பே ஆன்மிகம் என்பது தெளிவாகப் புரிகிறதல்லவா!

No comments:

Post a Comment