Friday, December 12, 2014

*84,00,000 யோனி பேதம்


1. தேவர் 11,00,000 யோனி பேதம்
2. மனிதர் 9,00,000 யோனி பேதம்
3. நாற்கால் விலங்கு 10,00,000 யோனி பேதம்
4. பறவை 10,00,000 யோனி பேதம்
5. ஊர்வன 15,00,000 யோனி பேதம்
6. நீர்வாழ்வன 10,00,000 யோனி பேதம்
7. தாவரம் 19,00,000 யோனி பேதம்
ஆக மொத்தம் 84,00,000 யோனி பேதம்










. ஆன்மாக்கள் எப்படிப் பிறந்திறந்து உழலும்?

நல்விணை, தீவிணை என்னும் இருவினைக்கும் ஈடாக நால்வகைத் தோற்றத்தையும், ஏழுவகைப் பிறப்பையும் எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதத்தையும் உடையவைகளாய்ப், பிறந்திறந்து உழலும்.

. நால்வகைத் தோற்றங்களாவன யாவை?

அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம் என்பவைகளாம். அண்டசம் = முட்டையிற் தோன்றுவன. சுவேதசம் = வேர்வையிற் தோன்றுவன. உற்பிச்சம் - வித்து, வேர், கிழங்கு முதலியவைகளை மேற் பிளந்து தோன்றுவன. சராயுசம் = கருப்பையிற் தோன்றுவன.

. எழுவகைப் பிறப்புக்களாவன யாவை?

தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம் என்பவைகளாகும். இவ்வெழுவகையினுள்ளும், முன் நின்ற ஆறும் இயங்கியற் பொருள்கள்; இறுதியில் நின்ற தாவரங்கள் நிலையியற் பொருள்கள். இயங்கியற் பொருளின் பெயர் சங்கமம், சரம்; நிலையியற் பொருளின் பெயர் தாவரம், அசரம்.

. கருப்பையிலே பிறப்பன யாவை?

தேவர்களும், மனிதர்களும், நாற்கால் விலங்குகளுமாம்.

 முட்டையிலே பிறப்பன யாவை?

பறவைகளும், ஊர்வனவும், நீர்வாழ்வனவுமாம்.

வேர்வையிலே பிறப்பன யாவை?

கிருமி, கீடம், பேன் முதலிய சில ஊர்வனவும், விட்டில் முதலிய சில பறவைகளுமாம். (கீடம் - புழு)
 வித்தினும் வேர், கொம்பு, கொடி, கிழங்குகளிலும் பிறப்பன யாவை?

தாவரங்கள்.

No comments:

Post a Comment