Sunday, May 10, 2015


''ஒரு செடியை நட்டு வளர்ப்பதற்குக்கூட எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. எந்த அளவுக்கு நீர் ஊற்றவேண்டும்... எப்போது உரம் போடவேண்டும்... எப்போது பூச்சி மருந்து அடிக்கவேண்டும்... எப்போது கிளைகளை வெட்டிவிட வேண்டும்... என எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அப்படி இருக்கையில், வீட்டுக்கும் நாட்டுக்கும் பயன்தரும் வகையில் ஒரு குழந்தையை வளர்ப்பது என்றால் சாதாரண காரியமா..? வழிமுறைகளைத் தெரிந்துகொண்டால் எதுவுமே சாதாரணம்தான்! கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்ததால், தேவைப்படும் நேரத்தில் தேவைப்படும் அறிவுரையும் உதவியும் கிடைத்து வந்தன. குடும்பத்தில் இருந்த அம்மா, பாட்டி, மாமியார் எல்லாம் ஒருவகையில் குழந்தை வளர்ப்பு நிபுணர்களாகவும் உளவியலாளராகவும், மருத்துவராகவும், செயல் இயக்குநராகவும், பேராசிரியராகவும் செயல்பட்டுவந்துள்ளனர். இப்போது அந்தக் குடும்ப அமைப்பு மாறியுள்ளது. . ஓர் இசைக்கருவி உங்கள் வீட்டில் இருப்பதினாலேயே நீங்கள் இசைக் கலைஞனாக ஆகிவிடுவதில்லை. ஒரு குழந்தையைப் பெற்றெடுத்ததினாலேயே நீங்கள் நல்ல பெற்றோர் ஆகிவிடுவதில்லை. இசைக்கக் கற்றுக் கொள்ளவேண்டும் & வளர்க்கத் தெரியவேண்டும். குழந்தையெனும் யாழ் உங்கள் வீட்டில் இருக்கிறது. குழந்தை வளர்ப்பில் , இளம் பெற்றோர்களே, நீங்கள் மாணவர்கள்தான். குழந்தை வளர்ப்பை கற்றுக்கொள்ளுங்கள்.. உங்கள் குடும்பத்தில் பரவட்டும் இனிய கீதம்! -

No comments:

Post a Comment