Tuesday, May 12, 2015

கோயில்களில் காமம் தெரிவிக்கும் ஆபாசச் சிலைகள் பழங்காலத்தில் இருந்தே படைக்கப்பட்டுள்ளன

கோயில்களில் காமம் தெரிவிக்கும் ஆபாசச் சிலைகள் பழங்காலத்தில் இருந்தே படைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து மாற்று மதத்தினர் எள்ளி நகையாடுகின்றனர் என்ற குறை இந்து நண்பர்களுக்கு இருந்துவருகிறது.
இதுகுறித்த விளக்கம் கொஞ்சம் காண்போம்.
எல்லாக்கலைகளிலும் சிறந்து விளங்கியவர்கள் நமது சனாதன மதத்தினர். மந்திர தந்திரம் சோதிடம் முதற்கொண்டு வைத்தியத்துறையிலும் மேலோங்கியவர்கள். அதேபோல் காமத்திற்கும் இலக்கணம் வகுப்பதில் வல்லவர்களாயிருந்தார்கள்.
காமசூத்திரம் கொக்கோகம் போன்ற மிக அருமையான நூல்கள் அக்கலையைக் கற்றுத்தருகின்ற இலக்கண இலக்கியங்களாகத் திகழ்ந்தன. இன்று மேனாட்டவர்கள் வியக்கும் காமக்கலைகளைக் கற்றுத்தந்தது நமது இந்திய சனாதன முன்னோர்கள் தான்.
அதேபோல் காமக்கலைகளை விளக்கும் சிற்பங்களைக் கோயிலின் பிரகாரத்தில் வடித்தனர். அதன் காரணங்கள் இவை :
1. சிறு வயது முதற்கொண்டு காமத்தை சிறிது சிறிதாக அறிந்து வந்தால் காமத்தின் எதிர்மறைத் தத்துவங்கள் மறைந்து போய் படைப்புக்காகவே காமம் என்னும் உண்மையை கற்றுத்தரலாம்.
2. குழந்தைப் பேறில்லாத தம்பதியினர் கோயிலுக்கு வரும் போது அவர்களிடம் இருக்கின்ற சிறு குறைகள் இச்சிற்பங்களைக் காணும்போது களையப்பட்டு காமத்தில் உந்தப்பட்டு கலவியில் மேலும் தீவிரமாக ஈடுபட்டு குழந்தைப்பேறு உண்டாக வாய்ய்புகள் 80 சதவீதம் வரை அதிகரிக்கின்றது.
3. காமம் என்பது கடவுளுக்கும் உகந்தது; அது ஒன்றும் ஒதுக்கப்படவேண்டிய கீழ்த்தரச்செய்கை அல்ல என்பதை மக்களுக்கு உணர்த்துவது.
4. காமம் என்பதை அறியாமல் அதை அடக்கி வாழும் எவருடைய வாழ்க்கையும் சிறப்பதில்லை. அதை முறையாகப் பயின்று கடைபிடித்து வருவதன் மூலம் கடவுளின் பேற்றினை ( மோட்சத்தை ) அடையலாம். இதனை நாசூக்க்காக விளக்குவது தான் காமக்கலைச் சிற்பங்கள்.
5. அறம் பொருள் இன்பம் கடவுட்பேறு இம்மூன்றும் தான் வாழ்க்கைத் தத்துவம். இதை வள்ளுவருக்கு முன்னரே சனாதன மதம் தர்மம் அர்த்தம் காமம் மோக்‌ஷம் என்று வகைப்படுத்தி இருந்தது. யோசித்துப் பார்த்தால் வாழ்க்கையே இம்மூன்றினுக்குள் அடங்கிவிட்டதை உணரலாம். அப்படி இருக்க அந்நான்கில் ஒன்றான காமம் கோயிற்சிலைகளில் இருப்பதில் என்ன தவறு..?
இந்த எனது சிந்தனையை முடிந்தவரை எங்கெல்லாம் நமது இந்துமதத்துக்கு எதிராக காமப்பிரச்சாரம் செய்கின்ற மாற்று மதத்தினருக்கு எடுத்துச் சொல்லுங்கள். லைக்குகள் மட்டுமல்ல இதன் பகிர்வும் நமது மதத்தை இணையம் முழுக்க எடுத்துச் செல்லும்

No comments:

Post a Comment