Monday, May 4, 2015

புலால் உண்ணாமை பற்றி

புலால் உண்ணாமை பற்றி உளவியல் மருத்துவ விஞ்ஞானம் இன்று கூறுகின்றது. இதனை மூவாயிரம் வருடங்களுக்கு முன்னரே திருமூலர் அருளிவிட்டார். இதனாலேயே கொல்லாமை புலால் உண்ணாமை பற்றி திருமூலர் திருமந்திரத்தில் அன்றே அருளிவிட்டார்.///
உளவியல் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிவிட்டது. சித்தர்கஉணவுக்காக மிருகங்களை கொல்லும் போது அந்த மிருகம் தன்னை காப்பாற்ற முயலும் போது அதற்கான சக்தியை வெளிப்படுத்துவதுடன் கொல்லுபவர் மீது வெறுப்பான என்னத்தை வெளிப்படுத்துவதுடன் கோரம் கொள்ளுகின்றது. இந்த உணர்வு அதன் தசைகளில் பதிகின்றது. அத்துடன் அதற்கான சுரப்பும் இறைச்சியில் கலக்கின்றது. இதனால் அதை உண்ணும் மனிதனின் உணர்வில் கலக்கின்றது. இது உலகத்தை அழிக்க ஏதுவான காரணங்களில் ஒன்றாகின்றது. ள் சிந்தனை எப்படிபட்டது. என்பதை மனுக்குலம் அறிந்திருக்க வேண்டியது அவசியமானதும் அவசரமானதுமாகும். இதனை திருமந்திரம்
‘கானுமறு கோடி கடிகழ் சந்தனம்
வானுறு மாமல ரிட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உண்பவர்க் கல்லது
தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே’ என்றார் திருமூலர். சரீர அபிமானத்தை விட்டொழிக்க வேண்டும். என்பதை வலியுறுத்துகின்றார். முழு முதல்வன் வேண்டுவோருக்கு வேண்டிய உருவில் காட்சி கொடுக்கும் அருள் வள்ளல் அவன்.

No comments:

Post a Comment