Saturday, May 9, 2015

பாஞ்சசன்யத்தின் மகிமை ...........

பாஞ்சசன்யத்தின் மகிமை ........... !!
பாஞ்சசன்யம் என்பது கடலில் கிடைக்கும் ஒரு சங்கு தான். ஆனால் அந்த சங்கு சாமான்யமாக கிடைப்பதில்லை.
ஆயிரம் சிப்பிகள் சேருமிடத்தில் ஒரு இடம்புரி சங்கு கிடைக்குமாம்.
ஆயிரம் இடம்புரி சங்குகள் விளையும் இடத்தில் ஒரே ஒரு வலம்புரி சங்கு கிடைக்குமாம்.
வலம்புரி சங்குகள் ஆயிர கணக்கில் எங்கு இருக்கிறதோ அங்கே அரிதான சலஞ்சலம் என்ற சங்கு கிடைக்குமாம்.
சலஞ்சலம் சங்கு பல்லாயிர கணக்கில் உற்பத்தியாகுமிடத்தில் அரிதினும் அரிதான பாஞ்சசன்ய சங்கு கிடைக்கும்.
சங்கொலி என்பதே பிரணவ ஓசையை வெளிப்படுத்தும் ஒரு இயற்க்கை வாத்தியம். அதிலும் சுத்தமாக அக்‌ஷரம் பிசகாமல் பிரணவ மந்திரத்தை ஒலிப்பது பாஞ்சசன்யம் சங்கு மட்டும் தான்.
அந்த சங்கு கிருஷ்ணன் கையில் மட்டும் தான் இருக்கும் !!

No comments:

Post a Comment