Thursday, May 28, 2015

காந்தாரியின் கண்களை திறந்த கிருஷ்ணன் ....... !!

காந்தாரியின் கண்களை திறந்த கிருஷ்ணன் ....... !!
தாயே .... நீங்கள் ஒரு பதிவிரதை. கணவன் பார்வையற்றவராக இருந்தும் பெருந்தன்மையோடு அவருடன் இல்லறத்தைச் செம்மையாக நடத்தியவர்கள். அவரால் பார்க்க முடியாததையெல்லாம் உங்களாலும் பார்க்க முடியாமல் போகட்டும் என்று உங்கள் பார்வைக்குத் தடை போட்டவர்கள்.
இமைகள் எந்த சந்தர்ப்பத்திலும் உயர்ந்துவிடக்கூடாது என்பதற்காக கண்களைச் சுற்றி கட்டு போட்டுக் கொண்டவர்கள். ஒரு சரியான தர்ம பத்தினியாக நீங்கள் நடந்து கொண்டிருந்திருக்கிறீர்கள். ஆனால்..
ஆனால் என்ன ?? காந்தாரியின் இந்தக் கேள்வி, சுற்றியிருந்தவர்கள் மனங்களிலும் எதிரொலித்தது.
நீங்கள் ஒரு நல்ல தாயாக வாழவில்லையே அம்மா !!
கண்ணா என்ன சொல்கிறாய் நீ .... !
ஆமாம், அம்மா கணவருக்காகக் கண்களைக் கட்டிக் கொண்ட நீங்கள், பிள்ளைகளுக்காகக் கண்களைத் திறந்திருக்கலாம். உங்கள் பார்வை அவர்கள் மேல் படவே இல்லையே அம்மா
அவர்களுடைய நடத்தை உங்களால் கண்காணிக்கப்படவே இல்லையே அவர்கள் என்ன செய்கிறார்கள், எங்கே போகிறார்கள், யாருடன் பழகுகிறார்கள், எப்படிப் பழகுகிறார்கள், என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று எதையுமே கவனிக்காமல் விட்டுவிட்டீர்களே அம்மா
கவனித்திருந்தால் நீங்கள் அவர்களைத் தடுத்திருப்பீர்கள். கண்டித்திருப்பீர்கள். ஏன், அடக்கிக் கூட இருப்பீர்கள். இல்லை. எதுவும் இல்லை. இப்போது தாயன்பு மட்டும்தான் மிச்சமிருக்கிறது
ஆனால் அதில் பங்குகொள்ளப் பிள்ளைகள்தான் இல்லை. ஆரம்பத்தில் ஒரு கண்டிப்பான தாயாகத் தாங்கள் விளங்கியிருந்தீர்களானால், இப்போது இத்தனை பெரிய இழப்பு உங்களுக்கு ஏற்பட்டிருக்காது அம்மா
அப்படியே சரிந்தாள் காந்தாரி.
கிருஷ்ணனின் குரல் வந்த திக்கில் சாய்ந்து அவனுடைய கால்களைப் பற்றிக் கொண்டாள்.
உண்மைதான் கண்ணா தவறு என்னுடையதுதான். பிள்ளையைச் சரியாக வழிநடத்தத் தெரியாத ஒரு தாய், அவன்மீது பாசம் வைக்கவும் தகுதியற்றவள்தான்.
என் குற்றத்தை உணர்கிறேன். என்னை மன்னித்துவிடு” என்று கதறினாள் !!

No comments:

Post a Comment