Tuesday, June 30, 2015

பதி பசு பாசம் என்றால் என்ன

படித்ததில் பிடித்தது
நான் யார் என்று மாணவன் குருவிடம் கேட்டான். நீ அதுவாக இருக்கின்றாய் என்று குரு திருவாய் மலர்ந்தார். “நான் அதுவாக இருக்கிறேன்என்பது தனக்கு விளங்கிவிட்டது என்று பதிலிறுத்தான் சீடன். அவன் தான் அதுவாவதாகக் கூறிவிட்டதாக ஆதிசங்கரர் அளித்த புதுவிளக்கம் ஒன்றே பத்தாம் நூற்றாண்டில் அத்தைவதம் (ஜீவாத்மாவும் பரமாத்மாவும் கர்மவினை நீங்கி இறக்கும் பொழுது ஒன்றாகிவிடும்) என்கிற தத்துவம் பிறக்கவைத்தது. இது தவறானதென விளக்கிடப் பிறந்ததே சுத்தாத்து விதம் (இரண்டுமல்ல ஒன்றுமல்ல என்ற நிலை உயிருக்கும் இறைவனுக்கும் என்றுமே உள்ளநிலையில் இருவினை ஒப்பும் சக்திநிபாதமும் அடைந்த உயிர் சிவோகம்பாவநிலையில் வாழ்ந்து இறைவனுடன் தாள் தலை ஸ்ரீ தாடலை ஆகப் பொருந்தி பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபட்டு அமைதி பெறும்) என்பதை விளக்கும் சைவசித்தாந்தம் தோன்றியது.

இறைவனும் உயிரும் இரண்டுமல்ல ஒன்றுமல்ல என்ற நிலை உயிரில் என்றுமே உள்ளது. தன்னை அணுத்தன்மையுடையதாக்கும் ஆணவத்தால் இந்த உண்மையை அறியாது, இருளில் உள்ள உயிர், தன்னையும் அறியமுடியாமல் தன்தலைவனையும் அறியமுடியாமல் தவிக்கும் துன்பநிலை கண்டு அந்த உயிரின் மேல் இறைவன் காட்டிய பாசம்தான் அந்த உயிருக்கு உடலையும் காலம ஒன்றையும் அதுசெய்த வினைப்பயனை அனுபவிப்பதற்கான நியதியையும், அது தன் ஆணவத்திலிருந்து விடுபடுவதற்காகக் கலைiயும் கலையில் சிறப்புற்றுப் பெறும் வித்தை என்னும் திறத்தையும் அதன்வழி கல்வியால் செல்வத்தால் வீரத்தால் இவற்றைத் அதிகம் அதிகம் தேடித்தான் வாழவேண்டுமென்று பிறக்கும் அராகம் என்னும் ஆசையையும் இந்த நிலையில் புருடன் என்னும் மானிடத்தகுதியையும் இவற்றை அனுபவித்து வாழும் இடமாக மாயையிலிருந்து உலகையும் அளிக்கிறான் என்பது சைவசித்தாந்தம். காலம் நியதி கலை வித்தை அராகம் புருடன் மாயை என்னும் ஏழையும் ஆன்மதத்துவங்கள் என்பர். எனவே வாழ்வை வாழ்வதற்கு மூலப்பொருள் அளித்த இடமாம் உலகம் மூலப்பொருளில் இருந்து வேறானது அல்ல. உயிர் ஏதோ வேறானதா? அதுவுமில்லை. உயிருள் ஒன்றாயும் உடனாயும் வேறாயும் இருந்து செயற்படுபவனே கடந்து உள்ளிருக்கும் கடவுளாயிற்றே. ஆகவே உயிரும் மூலப்பொருளில் இருந்து வேறானதல்ல. ஆதலால் பதி பசு பாசம் என்னும் மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்பான ஆனால் இரண்டல்ல ஒன்றுமல்ல என்ற இயல்பு கொண்டனவே. ஆதலால் தான் முப்பொருள்கள் என்று பன்மையில் பேசாது என்றுமுள்ள முப்பொருள் என்று திரித்துவம் என்று கிறிஸ்தவம் சொல்லும் நிலையில், அயர்லாந்தின் தேசிய சின்னமாக இலங்கும் சாம்றோக் இலை (ளூயஅ சுழஉம) எவ்வாறு ஒரேநடுப்பகுதியையும் மூன்று கிளைப்பகுதிகளையும் கொண்டிலங்குகிறதோ அவ்வாறு ஒரேதன்மையானதாகவும் முவ்வேறு தோற்றம் கொண்டதாகவும் பதி பசு பாசம் உள்ளது. பதி எல்லாவற்றுக்கும் உயிராக, உயிர்உள்ள போதும் இல்லாத போதும் ஆதாரமானது. பாசம் என்னையும் ஒரு பொருளாக்கி என்று மாணிக்கவாசகப் பெருமான் நெஞ்சுருகிக் கூறுவது போல் என்னை உயிர் என்னும் வடிவு கொள்ள வைத்த இறைவனின் பெருங்கருணைபேரன்பு. பசு எவ்வாறு தொழுவத்தில் கட்டப்பட்டுள்ளதோ அவ்வாறே நானும் உயிராக உடலுடன் கட்டப்பட்ட நிலையில் இந்த வாழ்வை அனுபவிப்பதால் என் உயிரை இயக்கும் என் ஆன்மாவுக்குப் பசு என்று அழகுத் தமிழ் சொல்லும் வழக்கு உள்ளது. இப்பொழுது எனக்கு நம்முன்னோர்கள் சொன்ன பதி பசு பாசம் என்றால் என்னவென்று புரிகிறது.

No comments:

Post a Comment