Thursday, July 9, 2015

பெண்ணுக்கு யோக்த்ரம் எனும் தர்பக் கயிறு கட்டும் மந்த்ரம்:

பெண்ணுக்கு யோக்த்ரம் எனும் தர்பக் கயிறு கட்டும் மந்த்ரம்:
ஆசாஸாநா :- (முதல் காண்டம் முதல் ப்ரச்நம்) ஓ அக்னி தேவனே! உம்மை நான் ஆராதிக்கும்போது என்னுடன் இருந்து ஒத்துழைக்கும் இந்த கந்யைகைக்கு, மனஅமைதி, நல்ல பிள்ளைச் செல்வங்கள், தேவையான செல்வம், நிறைந்த அழகு, இல்லறம் நடத்த தேவையான அனைத்து வசதிகளையும் இவள் உம்மிடம் வேண்டுகிறாள். இவைகளை நீர் இவளுக்கு அநுக்ரஹிக்கவேண்டும் என்பதற்கர்கவும், இந்த இல்லற வேள்வியில் இவளை இணைத்து பந்தப்படுத்திக்கொள்வதற்காகவும், இவளை இந்த தர்பக் கயிற்றினால் கட்டுகிறேன்.
நல்ல மனது, குழந்தைகள், ஐஸ்வர்யம், அழகுள்ள சரீரம் என எண்ணிறந்த ஆசைகளுடன் என்னை அடைந்திருக்கும் இந்த வதுவை அவற்றை அளிக்கவல்ல தேவதைகளின் ஆராதனமான இந்த விவாஹ ஹோமத்திற்காக இந்த தர்பக் கயிற்றினால் சுபமாக கட்டுகிறேன்.
(இல்லறத்தான் (க்ருஹஸ்தன்) மட்டுமே வேள்விகள் செய்ய அதிகாரம் உள்ளவன் என சாஸ்த்ரம் பகர்வதால், இன்று முதல் என் ஆயுள் உள்ளவரை இவள் என்னுடன் இணைந்து அனைத்து வேள்விகளிலும் பங்கேற்றுப் பெறும் நன்மைகளை இருவரும் சமமாக அநுபவிப்போமாக.)

No comments:

Post a Comment